விலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றான ஃபோர்டு, பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட புதிய ஃபிகோ, ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைல் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இவற்றின் ஆரம்ப விலை முறையே ரூ.5.39 லட்சம், ரூ.5.99 லட்சம் மற்றும் ரூ.5.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...!

இதில் ரூ.5.39 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுள்ள புதிய ஃபோர்டு ஃபிகோ மாடல் அதன் பிஎஸ்4 வெர்சன் மாடலை விட ரூ.16,000 விலை அதிகரிப்பாக பெற்றுள்ளது. இதன் டாப் வேரியண்ட்டான டைட்டானியம் BLU-வின் விலை ரூ.31,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

FORD FIGO - 1.2l Ti-VCT PETROL
Variants New Price (BS6) Old Price (BS4)

Ambiente Rs 539,000 Rs 523,000
Trend (New Variant) Rs 599,000 NA
Titanium Rs 635,000 Rs 599,900
Titanium Blu Rs 695,000 Rs 664,900
FORD FIGO - 1.5l TDCi DIESEL
Trend Rs 686,000 NA
Titanium Rs 725,000 Rs 689,900
Titanium Blu Rs 785,000 Rs 754,900
விலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...!

இதனால் இந்த வேரியண்ட் இனி ரூ.7.85 லட்சத்தில் டீலர்ஷிப்களிடம் கிடைக்கும். ஆனால் பிஎஸ்6 ஃப்ரீஸ்டைல் மாடலின் விலைகள் அப்டேட்களால் அதிகரிக்கப்படாமல் மாறாக ரூ.2,000-லிருந்து ரூ.37,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...!

இதனால் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை தற்போது ரூ.5.89 லட்சமாக குறைந்துள்ளது. இதன் டாப் வேரியண்ட்டான டைட்டானியம்+ டீசல் ரூ.819,000 விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் பிஎஸ்4 வெர்சனின் விலை ரூ.836,000 என்பது குறிப்பிடத்தக்கது.

FORD FREESTYLE - 1.2l Ti-VCT PETROL
Variants New Price (BS6) Old Price (BS4)

Ambiente Rs 589,000 Rs 591,400
Trend Rs 644,000 Rs 681,400
Titanium Rs 694,000 Rs 721,400
Titanium+ Rs 729,000 Rs 756,400
FORD FREESTYLE - 1.5l TDCi DIESEL
Trend Rs 734,000 Rs 745,900
Titanium Rs 784,000 Rs 790,900
Titanium+ Rs 819,000 Rs 836,900
விலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...!

பிஎஸ்6 ஃபோர்டு ஆஸ்பியர் மாடலின் வேரியண்ட்கள் ரூ.4,000-லிருந்து ரூ.38,000 வரையில் விலை குறைப்பை பெற்றுள்ளன. எனவே இனி ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் ஆரம்ப விலை ரூ.5.99 லட்சமாகும். ஆஸ்பியர் மாடலின் டாப் வேரியண்ட் ரூ.8.34 லட்சத்தில் சந்தையில் விற்பனையாகவுள்ளது.

FORD ASPIRE - 1.2l Ti-VCT PETROL
Variants New Price (BS6) Old Price (BS4)

Ambiente Rs 599,000 Rs 598,500
Trend Rs 659,000 Rs 663,400
Titanium Rs 709,000 Rs 737,400
Titanium+ Rs 744,000 Rs 782,400
FORD ASPIRE - 1.5l TDCi DIESEL
Trend Rs 749,000 Rs 737,400
Titanium Rs 799,000 Rs 817,400
Titanium+ Rs 834,000 Rs 862,400
விலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...!

இந்த மூன்று மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளை ஃபோர்டு நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி பவரையும் 119 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

விலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...!

மற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டீசல், 100 பிஎச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியது. இந்த என்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...!

என்ஜின் அப்டேட் தவிர்த்து ஃபோர்டின் இந்த மூன்று மாடல் கார்களிலும் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் இவற்றில் வழக்கமாக பொருத்தப்படும் தொழிற்நுட்பங்களை ஃபோர்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

விலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...!

ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமான ஃபிகோ, ஃப்ரீஸ்டைல் மற்றும் ஆஸ்பியர் மாடல்கள் தற்போது சந்தைக்கு வந்துள்ளன. ஆனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் எண்டேவர் எஸ்யூவி இன்னும் பிஎஸ்6 அப்டேட்டை பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
2020 Ford Figo, Aspire & Freestyle BS6 Models Launched In India: Prices Start At Rs 5.39 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X