ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

ஷோரூமிற்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே புதிய ஃபோர்டு காரகளை டோர் டெலிவிரி பெறும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

கொரோனாவால் ஸ்தம்பித்து போயிருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 17ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொருளாதாரம் முடக்கத்தை ஓரளவு சரிசெய்யும் பொருட்டு, வர்த்தக நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்குவதற்கு அரசு விதிகளில் தளர்வு கொடுத்து வருகிறது.

ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

அந்த வகையில், கடந்த ஒன்றரை மாதங்களாக மூடப்பட்டு இருந்த வர்த்தக ஸ்பானங்கள் திறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் டீலர்களும் விதி தளர்வுகளை பயன்படுத்தி ஷோரூம்களை திறப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கின்றனர்.

ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

எனினும், கொரோனா அச்சத்தால் வாடிக்கையாளர் வருகை எதிர்பார்த்த அளவு இருக்காது என்பதை மனதில் வைத்து கார் நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக கார் வாங்கும் நடைமுறையை அறிவித்து வருகின்றன.

ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

இந்த வரிசையில், ஃபோர்டு கார் நிறுவனமும் தனது வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக கார் வாங்கும் நடைமுறையை எளிதாக்கி உள்ளது. Dial A Ford என்ற புதிய திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ஃபோர்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை 1800-419-3000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை அளித்தால் போதுமானது.

ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

வாடிக்கையாளர்களின் அருகாமையிலுள்ள ஃபோர்டு டீலர் மூலமாக கார் முன்பதிவு செய்வது, டெஸ்ட் டிரைவ் மற்றும் டோர் டெலிவிரி வரை அனைத்து நடைமுறைகளும் டீலர் பணியாளர் ஒத்துழைப்புடன் செய்ய முடியும். மேலும், ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலன் கருதி உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும்.

ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

ஷோரூமிற்குள் நுழையும் பணியாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை அளவு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். மேலும், சமூக இடைவெளி நிபந்தனையுடன் குறிப்பிட்ட அளவு பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே இருக்க அனுமதியுண்டு.

ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து வருவதும் அவசியம். அதேபோன்று, மாஸ்க்குகளை உரிய முறையில் அதற்கான குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஃபோர்டு கார் ஷோரூம்களில் மூன்று வேளை கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

அதேபோன்று, அனைத்து ஃபோர்டு கார் ஷோரூம்களிலும் கைகளை சுத்தப்படுத்துவதற்கான கிருமி நாசினி திரவமும் வைக்கப்பட்டு இருக்கும். கொரோனா பரவுவதை தடுக்கும் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

ஷோரூமிற்கு போகாமலேயே புதிய ஃபோர்டு கார்களை வாங்கலாம்!

இதே நடைமுறை ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது காரை சர்வீஸ் செய்வதற்கும் கடைபிடிக்கப்படும். வாடிக்கையாளர்களின் கார்களை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று, சர்வீஸ் செய்தவுடன் திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படும்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has introduced Dial A Ford initiative for new car buyers across the country.
Story first published: Wednesday, May 6, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X