20 இந்திய வீரர்களின் உயிரை குடித்த சீனா... 'அஹிம்சை' வழியில் ஆப்பு சீவும் இந்தியா!

லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி 20 இந்திய ராணுவ வீரர்களின் உயிரை குடித்த சீனாவுக்கு அஹிம்சை வழியில் பதிலடி கொடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

இந்திய எல்லைக்குள் அடிக்கடி புகுந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது சீனா. தற்போது ஒரு படி மேலே போய் லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் கூடாரம் அமைத்து சொந்தம் கொண்டாட முனைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், 20 வீரர்களின் உயிரை குடித்து பதற்றத்தை அதிகரித்துள்ளது.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

இந்த நிலையில், சீனாவின் இந்த செயல் இந்தியர்களை கொதித்து போகச் செய்துள்ளது. சீனாவுக்கு ராஜதந்திர முறையில் நெருக்கடிகளை அதிகரிக்கும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. தவிரவும், கத்தியின்றி, ரத்தமின்றி அஹிம்சை வழியில் சீனாவுக்கு ஆப்பு சீவும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சீன பொருட்களை புறக்கணிப்பதற்கான போராட்டங்களும் வலுப்பெற துவங்கி இருக்கின்றன.

பொழுதுபோக்கு என்ற பெயரில் இந்தியர்களின் அன்றாட நடவடிக்கைகளையும், தனிப்பட்ட விபரங்களையும் திரட்டி, கண்காணித்து வரும் சீன செயலிகளுக்கு தடை போடுவதற்கும் புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளன.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

இந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையிலும் சீனாவின் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மலிவு விலையில் சீனாவிலிருந்து வாகன உதிரிபாகங்களை வாங்கி இங்கு அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் வர்த்தகத்தை பல பெரிய நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் செய்து வருகின்றன.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

குறிப்பாக, மின்சார வாகன உற்பத்தித் துறையில் சீன உதிரிபாகங்களின் பங்கு அதிகமாக உள்ளது. பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்டவற்றை மலிவான விலையில் இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து தங்களது சொந்த பிராண்டில் விற்பனை செய்யும் முயற்சிகளில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த வழியில் நல்ல லாபம் இருப்பதால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இந்த வர்த்தக யுக்தியை பயன்படுத்தி வருகின்றன.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

இந்த நிலையில், 20 ராணுவ வீரர்களை பறிகொடுத்து தகித்து வரும் நிலையில், இந்தியாவில் சீன வர்த்தகத்தை முடக்குவதற்கான சில முக்கிய முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்திய சந்தையில் சீனாவின் மலிவு விலை டயர்கள் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. தற்போது டயர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை போட்டுவிட்டது. இதனால், இந்தியாவில் உற்பத்தியாகும் டயர்களுக்கு போதிய சந்தை வாய்ப்பு உருவாகும். தரமற்ற சீன டயர்கள் புழக்கமும், விபத்துக்களும் குறையும்.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

அதேபோன்று, மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, மின் மோட்டார், கட்டுப்பாட்டு சாதனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் வாகனங்களாக அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில், மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சீன உதிரிபாகங்களை நம்பி இருக்கக்கூடாது என்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கேட்டுக் கொண்டுள்ளார்.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

தற்போது சீன நிறுவனங்கள் மலிவு விலையில் கொடுத்தாலும், இந்தியாவில் மின்சார கார் விற்பனை அதிகரிக்கும்போது தனது உதிரிபாகங்களின் விலையை சீனா கணிசமாக உயர்த்தும். எனவே, உள்நாட்டிலேயே மின்சார கார்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதிலும், அதனை பயன்படுத்துவதிலும் வாகன நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகன உற்பத்தி கேந்திரமாக இந்தியா மாறும். அதற்கு தக்கவாறு அனைத்து ஒத்துழைப்பு மற்றும் சலுகைகளை அரசு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், புதிய இறக்குமதி கொள்கையை வெளியிட உள்ளதாகவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இதனால், சீன வாகன உதிரிபாகங்களை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு நேரடியாக இறங்கி இருக்கிறது.

20 வீரர்களின் உயிரை குடித்த சீனா... அஹிம்சை வழியில் ஆப்பு சீவும் மத்திய அரசு!

மின்சார வாகனத் துறை சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அறிவோம். மின்சார வாகன விற்பனை அதிகரிக்கும்போது இந்த நிலை மாறும் என்றும் நிதின் கட்காரி கூறி இருக்கிறார். மத்திய அரசின் தொடர் முயற்சிகள் எதிர்காலத்தில் சீனாவை சேர்ந்த வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புகளையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Central Minister Nitin Gadkari on Thursday said Indian EV manufacturing companies should not depend on China and instead focus on research and innovation to ramp up domestic manufacturing. The minister also said the government is working on formulating a new policy for import substitution.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X