ஆயிரம் குதிரை திறன் - 15,500 என்எம் டார்க்: வியப்பில் ஆழ்த்தும் பவர்ஃபுல் ஹம்மர் மின்சார கார்...
ஹம்மர் நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு பின் கார் உற்பத்தியில் களமிறங்க இருக்கின்றது. இந்த கார் சந்தையில் விற்பனையாகும் மற்ற கார்களைக் காட்டிலும் அதிக பவர்ஃபுல்லான தயாரிப்பாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் பார்வையை மின்சார வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பியுள்ளன.
சிறு மற்றும் பெருநிறுவனங்கள் வரை இந்த செயல்பாட்டில் முனைப்பைக் காட்டி வருகின்றது. இதற்கு நாள்தோறும் புதிது புதிதாக அறிமுகமாகும் மின்வாகனங்களே சான்று.

இதற்கு, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் தேவைகளில் மிக முக்கியமானதாக மின்சார வாகனங்கள் உருமாறியிருப்பதே அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் அவர்களின் பார்வையை மின்வாகனங்களின் உற்பத்தியின் பக்கம் திருப்பியுள்ளது.

ஆகையால் பட்ஜெட் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் முதல் உயர்ரக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வரை மின்வாகன உற்பத்தியில் தீவிரம் காட்டிவருகின்றன. குறிப்பாக சூப்பர், சொகுசு மற்றும் லக்சூரி வாகனங்களை தயாரித்து வரும் நிறுவனங்கள் இதில் கூடுதல் முணைப்பைக் காட்டத் தொடங்கியுள்ளன.

அந்தவகையில், ஹம்மர் நிறுவனமும்கூட இந்த செயல்பாட்டை விளக்கும் வகையில், புதிய மின்சார மாடல்குறித்த டீசர் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்நிறுவனம் விரைவில் புதிய ரக மின்சார காரை அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது.

உலகில் இயங்கும் பாப் கலாச்சாரத்திலான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹம்மர் நிறுவனமே மிக முக்கியமான நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. உலகம் முழுவதும் கொண்டுவரப்பட்ட எரிபொருள் பயன்பாட்டு விதியின் காரணமாக இந்த கார்களின் உற்பத்தியை ஜிஎம் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு முதல் நிறுத்தியது.

இந்நிலையில், புதிய மாசுகட்டுப்பாட்டிற்கு ஏற்ப மீண்டும் ஹம்மர் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையிலேயே இந்த புதிய ஹம்மர் மின்சார கார் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதனையே டீசர் வீடியோ வாயிலாக அது உறுதி செய்திருக்கின்றது. இந்த வாகனம் சுற்றுப்புறச் சூழலுக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்தாத சிறப்பு வசதி கொண்ட வாகனமாக திகழும் என கூறப்படுகின்றது.

அதேசமயம், இந்த மின்சார காரில் மற்ற எந்தவொரு மின்சார காரிலும் இடம்பெறாத வகையிலான அதீத திறன் வாய்ந்த மின்மோட்டாரை ஹம்மர் பயன்படுத்த இருக்கின்றது. அது, அதிகபட்சமாக ஆயிரம் குதிரைகளின் ஓடும் திறனை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
மேலும், 15 ஆயிரம் என்எம் டார்க்கையும்வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இந்த மின் மோட்டார் காட்சியளிக்கின்றது. இதை எழுத்து பிழையாக டைப் செய்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இது நம்பக தன்மை வாய்ந்த தகவல் ஆகும். இதனையே டீசர் வாயிலாக ஹம்மர் உறுதி செய்திருக்கின்றது.

இந்த அதீத திறனால் ஹம்மர் எலெக்ட்ரிக் கார் வெறும் 3 செகண்டுகளிலேயே 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை தொட்டுவிடும். இந்த திறனை தற்போது எஸ்யூவி ரகத்தில் விற்பனையாகும் எந்தவொரு காரும் வெளிப்படுத்தாது என்பது நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தகவல் ஆகும்.

இதுமட்டுமின்றி, இந்த காரில் பல்வேறு பிரிமியம் தரத்திலான சொகுசு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், காரில் இடம்பெறும் வசதி, ரேஞ்ச் மற்றும் விலை போன்ற எந்தவொரு தகவலும் வெளிப்படுத்தவில்லை. ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டுகின்ற வகையிலேயே இந்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் ஏற்பட்ட அதிகபட்ச நிதி நெருக்கடி மற்றும் இக்கட்டான சூழ்நிலைகள் காரணமாக ஹம்மர் உற்பத்தியை ஜிஎம் கைவிட்டது. இதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகள் கழித்து புத்துணர்வுடன் ஹம்மர் மீண்டும் களம் காண இருக்கின்றது. அதேசமயம், இந்த காரில் ஐசி எனப்படும் எரிபொருள் எஞ்ஜின் அறிமுகம் செய்யப்பட மாட்டது என ஜிஎம் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

எனவே, ஹம்மர் மின்சார காராக மட்டுமே சந்தையில் கிடைக்க இருக்கின்றது. இதன் உற்பத்தி வருகின்ற 2021ம் ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. டெட்ராய்டு பிளாணட்டிலேயே இந்த சிறப்பு வாய்ந்த அதிநவீன திறன் கொம்ட தயாரிக்கப்பட இருக்கின்றது. ஆகையால், இந்த 2022ம் ஆண்டிற்கு உள்ளாகவே சாலையில் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பின்னரே இந்திய வருகைகுறித்த தகவலும் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








