ஊரடங்கு நீட்டிப்பு... வாகன காப்பீடு புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

கொரோனா வைரஸ் பூதாகரமான பிரச்னைகளை கிளப்பி இருக்கிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. வர்த்தக ஸ்பானங்கள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதால், பல்வேறு செயல்பாடுகளும் தேங்கி நிற்கின்றன.

முதல்கட்டமாக ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. வரும் மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு காலம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

 ஊரடங்கு நீட்டிப்பு... வாகன காப்பீடு புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

இதனால், வர்த்தக செயல்பாடுகளை மனதில் வைத்து பல்வேறு அறிவிப்புகளையும், வழிகாட்டு முறைகளையும் மத்திய அரசும், அரசு துறைகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு புதுப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 ஊரடங்கு நீட்டிப்பு... வாகன காப்பீடு புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

இதன்படி, கடந்த மார்ச் 25ந் தேதி முதல் வரும் மே 3ந் தேதி வரை வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால், அதற்கு மே 15 வரை புதுப்பித்துக் கொள்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 ஊரடங்கு நீட்டிப்பு... வாகன காப்பீடு புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

ஏற்கனவே, ஏப்ரல் 21ந் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 ஊரடங்கு நீட்டிப்பு... வாகன காப்பீடு புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

மே 15ந் தேதி வரை வழங்கப்பட்டுள்ள கூடுதல் கால அவகாசத்தில் இழப்பீடு உரிமை கோருவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். அதாவது, ஏதேனும் விபத்து உள்ளிட்ட இழப்பு ஏற்பட்டாலும், இழப்பீடு கோருவதற்கான வாய்ப்பை மோட்டார் வாகன காப்பீட்டு பாலிசிதாரர்கள் பெற முடியும்.

 ஊரடங்கு நீட்டிப்பு... வாகன காப்பீடு புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

வாகன காப்பீடு எந்த பிரச்னையும் இல்லாமல் தொடர்வதற்கு மே 15ந் தேதிக்குள் பிரிமீயத்தை செலுத்தி புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளது. இதேபோன்று, ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயத்தையும் புதுப்பிதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 ஊரடங்கு நீட்டிப்பு... வாகன காப்பீடு புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

இதேபோன்று, வாகனங்களுக்கான வாரண்டி காலம் மற்றும் இலவச சர்வீஸ் காலத்தையும் வாகன தயாரிப்பாளர்கள் கூடுதல் கால அவகாசம் கொடுத்து நீட்டித்துள்ளனர். இதன்மூலமாக, ஊரடங்கு முடிந்த பின்னர், வசதியான நேரத்தில் சர்வீஸ் செய்து கொள்வதற்கான வாய்ப்பை பெற முடியும். இந்த காலத்தில் வாரண்டியையும் கோருவதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படும்.

 ஊரடங்கு நீட்டிப்பு... வாகன காப்பீடு புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வந்தாலும், அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. கொரோனா தாக்கம் குறைந்தால் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கையும், வர்த்தக செயல்பாடுகளும் படிப்படியாக சீரடையும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 17, 2020, 13:09 [IST]
English summary
Central Government has extended third party vehicle insurance policy renewal time till May 15, 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+