Just In
- 11 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 58 min ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
- News
பரபரப்பு.. சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு.. சிறையிலிருந்து மருத்துவமனைக்கு ஷிப்ட்?
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பழைய வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக்கை கட்டாயமாக்க மத்திய அரசு தீவிரம்
ஃபாஸ்டேக் பயன்பாட்டை முழுமையாக அமல்படுத்தும் விதத்தில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சுங்கச் சாவடிகளில் கால விரயத்தை குறைக்கவும், பணம் செலுத்தும் முறையை எளிதாக்கும் விதத்தில் மின்னணு முறையில் பண செலுத்தும் வகையில் ஃபாஸ்டேக் நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஃபாஸ்டேக் அட்டையை கார் உள்ளிட்ட வாகனங்களின் முன்புற கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

வாகனங்கள் சுங்கச் சாவடியை கடக்கும்போது, ஃபாஸ்டேக் அட்டையில் உள்ள குறியீட்டை பயன்படுத்தி, சுங்கச் சாவடியில் உள்ள சென்சார் மூலமாக வாகன உரிமையாளரின் வங்கி அல்லது வாலட் கணக்கிலிருந்து பணம் சுங்கச்சாவடிக்கு செலுத்தப்பட்டு விடும்.

ஒவ்வொரு வாகனமாக சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி செல்லும் நடைமுறை தவிர்க்கப்படும் என்பதால், நேரமும், எரிபொருள் விரயமும் தவிர்க்க முடியும்.

இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் முதல் ஃபாஸ்டேக் அட்டையுடன் புதிய வாகனங்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது பழைய வாகனங்களிலும் ஃபாஸ்டேக் அட்டையை கட்டாயமாக்குவதற்கு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.

அதன்படி, 2017ம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஃபாஸ்டேக் இருந்தால்தான் மூன்றாம் நபர் காப்பீடு செய்ய முடியும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, காப்பீட்டு விண்ணப்ப படிவம் 51ல் ஃபாஸ்டேக் அடையாள எண்ணை கொடுப்பதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, முதலீட்டாளர்களிடமும் கருத்துக் கேட்டுள்ளது.

இதற்கு ஒத்த கருத்து ஏற்படும் பட்சத்தில், வரும் ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு வழங்கப்படும் என்ற புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வருவதற்கும் திட்டம் உள்ளது. காப்பீடு மட்டுமில்லாமல், நேஷனல் பர்மிட் வாகனங்களுக்கான தகுதிச் சான்று பெறுவதற்கும், அதில் ஃபாஸ்டேக் அட்டை மற்றும் கணக்கு இருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

அதேநேரத்தில், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. வாகன உரிமையாளர்கள் மூன்றாம் நபர் காப்பீடு செய்வதை தவிர்க்க முற்படுவதற்கு இது வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளன.