இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!

கொரோனா பிரச்னையால் முதலீடுகள் செய்வதற்கு பல பெரிய நிறுவனங்கள் தயங்கி வரும் நிலையில், சீன கார் நிறுவனம் இந்தியாவில் ரூ.7,500 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!

கொரோனா பிரச்னை காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் பல நாடுகளும் தீவிரமாக இறங்கி உள்ளன. குறிப்பாக, பல பெரும் நிறுவனங்கள் முதலீடுகளை தவிர்க்க முடிவு செய்துள்ளன.

இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!

இந்த நிலையில், சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார் நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், மஹாராஷ்டிராவில் 1 பில்லியன் டாலர்களை (ரூ.7,800 கோடி) முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!

இதற்காக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியாவுக்கான சீன தூதர் சூன் வெய்டாங் முன்னிலையில் கிரேட்வால் மோட்டார் நிறுவனத்திற்கும் மஹாராஷ்டிர அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் தலேகானில் செயல்பட்டு வந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே கார் ஆலையை கிரேட்வால் மோட்டார் நிறுவனம் கடந்த ஜனவரியில் கையகப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!

இந்த ஆலை 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. புனேயில் இருந்து 45 கிமீ தூரத்திலும், மும்பை துறைமுகத்தில் இருந்து 100 கிமீ தூரத்திலும் இருக்கிறது. இந்த ஆலையில் படிப்படியாக ரூ.7,500 கோடி வரை முதலீடு செய்யப்போவதாக கிரேட்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் உற்பத்தி மட்டுமின்றி, பணியாளர் பயிற்சி, நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை இங்கு செயல்படும்.

இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!

அத்துடன், பெங்களூரில் கார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் படிப்படியாக 3,000 ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக கிரேட்வால் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!

சீனாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான கிரேட்வால் நிறுவனம் தனது கீழ் செயல்பட்டு வரும் ஹவல் நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது, சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் இந்தியாவில் எம்ஜி பிராண்டில் கார்களை விற்பனை செய்யும் அதே யுக்தியை கையில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் எச்9, எஃப்-7, எஃப்7எக்ஸ், எஃப்-5 ஆகிய எஸ்யூவி மாடல்கள் மற்றும் ஐக்யூ மற்றும் ஆர்1 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது. அடுத்த ஆண்டு முதல் ஹவல் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த கிரேட்வால் மோட்டார் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Great Wall Motors to invest US$ 1 billion in India Phased Manner.
Story first published: Tuesday, June 16, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X