Just In
- 5 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 9 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போலீசை கண்காணிக்க புதிய கருவிகள்... இனி அதுக்கு வாய்ப்பே இல்ல... மகிழ்ச்சியில் பொதுமக்கள்...
போலீஸாரை கண்காணிக்க காவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் புதிய கருவிகள் சேர்க்கப்பட இருக்கின்றன. அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹரியானா மாநிலம், குருகிராம் காவல்துறை அதன் அனைத்து பிசிஆர் வாகனங்களிலும் (போலீஸார் பயன்படுத்தும் வாகனங்கள்) ஜிபிஎஸ் மற்றும் ஜியோ ஃபென்ஸிங் ஆகிய கருவிகளைப் பொருத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் பயன்படுத்தும் வாகனங்களில் இக்கருவிகளைப் பொருத்துவதன் மூலம் காவலர்களின் அனைத்து செயல்களும் கண்காணிக்கப்படும் என கூறப்படுகின்றது.

குறிப்பாக, காவலர்களைக் கண்காணிக்கும் நோக்கில் பொருத்தப்பட இருக்கும் இந்த கருவிகள் அவர்களின் எல்லை மற்றும் அழைப்புகளை ஏற்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கின்றனர் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற முடியும்.மேலும், டிஜிட்டல் ரெக்கார்ட் கருவிகளும் காவலர்கள் பயன்படுத்தப்படக் கூடிய அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்பட்ட இருக்கின்றன. அவை, போலீஸாரின் அனைத்து செயல்களையும் தரவாக சேகரிக்க உதவும்.

பிசிஆர் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டுவது மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பது உள்ளிட்டவற்றை அறிந்துக் கொள்ளவும் புதிய கருவிகள் உதவியாக இருக்கின்றன. 100 போன்ற அவசர அழைப்புகள் மற்றும் சிசிடிவி கேமிராக்களைக் கண்கானித்து வரும் கன்ட்ரோல் ரூமிலேயே போலீஸாரின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிப்பு செய்யப்பட இருக்கின்றன.

24X7 கண்காணிப்பு செய்யப்பட இருப்பதால் போலீசாரால் இனி ஒரே இடத்தில் நிற்கவோ அல்லது எல்லையைத் தாண்டி செல்லவோ முடியாது. இதை மீறும் பட்சத்தில் அனைத்து தகவலும் புதிய கருவிகள் மூலம் சேகரிக்கப்படும். இது பின்னாளில் குறிப்பிட்ட அந்த காவல் அதிகாரிக்கு சிக்கலை ஏற்படுத்த வழி வகுக்கலாம்.

நகரத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் நோக்கிலேயே காவல்துறைக்கு இத்தகைய அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது. பணி நேரத்தில் ஒரே இடத்தில் காவல் அதிகாரிகள் நின்று விடுவதால் குறிப்பிட்ட போலீஸாரின் கண்காணிப்பு எல்லைக்கு உட்பட்ட பகுயில் குற்றச் சம்பவம் அரங்கேற வழி வகுத்துவிடுகின்றது. ஒரு சில போலீஸாரால் அரங்கேற்றப்படும் இந்த செயலால் அனைத்து போலீசாரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனைத் தடுத்து, தொடர் ரோந்து பணியில் போலீஸாரை ஈடுபடுத்தும் விதமாக ஜியோ ஃபென்சிங் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவிகள் அவர்களின் வாகனங்களில் பொருத்தப்பட இருக்கின்றன. இதன் மூலம் குற்றச் சம்பவங்களைக் கணிசமாக தடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.

இதன் காரணத்தினாலேயே போலீஸார்களின் பிசிஆர் வாகனத்தில் புதிய தொழில்நுட்ப கருவிகள் சேர்க்கும் பணிக்கு குருகிராம் காவல்துறை தீவிரம் காட்ட தொடங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி போலீஸாரிடையே ஆரோக்கியமான உறவையும் ஏற்படுத்தவும் இந்த கருவிகள் உதவும் என கூறப்படுகின்றது.

ஒவ்வொரு வாகனத்திலும் இணைக்கப்படும் ஜிபிஎஸ் கருவி அதன் நேரடி இருப்பிடத்தை வழங்கும் என்றும், எந்த வேனும் தனக்கு ஒதுக்கப்பட்ட டிஜிட்டல் எல்லையைத் தாண்டினாலும் கட்டுப்பாட்டு அறைக்கு அது உடனடியாக எச்சரிக்கை அனுப்பும் என்றும் குருகிராம் காவல்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.

மேலும், வேன்கள் எப்போதும் கண்காணிக்கப்படுவதால், அவை நகர்வதை உறுதி செய்ய முடியும் எனவும் கூறினார். மாநிலத்திலேயே குருகிராமில் மட்டுமே முதல் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுவிட்டநிலையில், பல பிசிஆர் வேன்கள் மற்றும் பைக்குகள் ரோந்துக்கு பணிக்கு செல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதுக் கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம், முன்பைக் காட்டிலும் தற்போது நகரத்தில் கவலர்களின் ரோந்து அதிகரித்திருப்பதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், போலீசாரிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற குற்றங்கள் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டைக் காட்டிலும் தற்போதைய ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் 23.4% சரிவைக் கண்டிருக்கின்றது. 2019 ஆம் ஆண்டில் (ஆகஸ்ட் வரை) 78 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 58 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், பறித்தல், கொள்ளை மற்றும் கொலை வழக்குகளும் 48.3% குறைந்துள்ளன. வாகன திருட்டு 61.9% குறைந்துள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான வழக்குகள் 11% குறைந்துவிட்டன.

சிறந்த காவல் பணிக்காக, குருகிராம் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மானேசர் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு குற்றப் பின்னணியுடன் காணப்படும் பகுதியிலேயே அதிகளவில் பிசிஆர் வேன் மற்றும் பைக்குகள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

சட்ட ஒழுங்கை காப்பதில் காவல்துறையே முக்கிய பங்கினை வகிக்கின்றது. இத்துறையிலும் சில சந்தர்ப்பவாதிகள் இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த துறை மீது துளியளவும் நம்பிக்கையற்ற சூழ்நிலையே நிலவுகின்றது. இதுபோன்ற அவலங்களைப் போக்கி காவல்துறை மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தற்போதைய நடவடிக்கை உதவும் என நம்பப்படுகின்றது.