கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், நாட்டுக்கே முன்னுதாரணமான மாநிலாமாக மாறும் முயற்சியில் ஹரியானா களமிறங்கியிருக்கின்றது.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியும் காட்டுத் தீயைப் போல் கட்டுக்கடங்காமல் பரவி கொண்டிருக்கின்றது ஒற்றை வைரஸ் கொரோனா. இதன் அதி-தீவிர தன்மை மனித இனத்திற்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, வைரசை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காக சில கசப்பான நடவடிக்கைகளை அவ்வப்போது மத்திய, மாநிலம் அரசுகள் இணைந்து அறிவித்து வருகின்றன.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

மக்களை தனிமைப் படுத்துதல் மற்றும் தேசியளவிலான ஊரடங்கு போன்ற மிகக் கடுமையான உத்தரவுகளை அவை பிறப்பித்து வருகின்றன. வைரசைக் கட்டுபடுத்த தற்போது வரை மருந்து கண்டுபிடிக்காத காரணத்தினாலே இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை அரசுகள் மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன. இதே நிலைதான் உலக நாடுகளிலும் நிலவிக் கொண்டிருக்கின்றது.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

இந்தியா ஓர் வளர்ந்து வரும் நாடு என்பதால் கொரோனா வைரசின் தாக்கம் பெரியளவில் தெரிகின்றது. குறிப்பாக பொருளாதார அளவில் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றது இந்தியா. இதற்கு அனைத்துத்துறையும் செயலற்ற நிலையில் இருப்பதே காரணம்.

இருப்பினும், கொரோனா வைரசிடம் மக்களை இருந்து காப்பதற்கான முயற்சிகளை அது கைவிடவில்லை. மேலும், அதனை தீவிரப்படுத்தியே வருகின்றன.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

இந்நிலையில், இதுவரை எந்தவொரு மாநில அரசும் மேற்கொள்ளாத ஓர் நடவடிக்கையை ஹரியானா மாநிலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அது, அதன் பொது பேருந்துகளான அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ்களை கொரோனா வைரசின் மாதிரிகளைச் சேகரிக்கப்பதற்கு தயாராக்கி வருகின்றது. இதுகுறித்த அறிவிப்பையும் அது வெளியிட்டுள்ளது.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

முன்னதாக, தனி சிகிச்சை அறைக்காக அதன் பேருந்துகளை தற்காலிக வார்டுகளாக மாற்றிய ஹரியானா, தற்போது அதே பேருந்துகளை வைத்து வைரஸ் மாதிரிகளைச் சேகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சில பேருந்துகளையும் அது ஒதுக்கியிருக்கின்றது.

இந்த தனித்துவமான திட்டம் அம்மாநிலத்தின் குருகிராம் நகரத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பேருந்து தனி வார்டு வசதியும் இந்நகரத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

மாதிரி சேகரிப்பு மையமாக மாறியிருக்கும் இப்பேருந்துகள் நகரத்தின் மூன்று முக்கிய பகுதிகளில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றன. மக்கள் அடர்த்தியை அதிகம் கொண்ட பகுதிகளுக்கு மிக அருகில் புகழ்வாய்ந்த இடங்களான லீஷர் வேலி மைதானம், தவு தேவி லால் ஸ்டேடியம் மற்றும் ஷீட்டாலா மாதா கோயில் ஆகிய மூன்று இடங்களில் இப்பேருந்துகள் செயல்பட இருக்கின்றன.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

ஆரம்பகட்டமாக தொடங்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தை விரைவில் வீடு வீடாக தேடி சென்று பரிசோதனை மேற்கொள்வது மற்றும் மாதிரிகளைச் சேகரிப்பது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகளை உடனுக்குடன் வீடு வாசல் தேடி வந்து கொடுப்பதற்கான திட்டத்தையும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

பேருந்துகளை தனி வார்டாகா மாற்றுவது மற்றும் மாதிரிகளைச் சேகரிக்க பயன்படுத்துவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. எனவே, அனைத்து மாநிலங்களின் கண்களின் ஹரியானா மாநிலம் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது நாடு முழுவதும் மருத்துவமனை பற்றாக்குறை நிலவி வருகின்றது. போதாதற்கு வைரசின் பரவும் தன்மையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

இம்மாதிரியான சூழ்நிலையில் நோய் தொற்றைக் கண்டறிய ஹரியானா மாநிலம் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த பேருந்துகள் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் நின்று ஆய்வு பணியை மேற்கொள்ள இருப்பதால் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் குறைவுதான் என கூறப்படுகின்றது.

கொரோனா போர்: இதுவரை யாருமே எடுக்காத முயற்சி.. நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறுகிறது ஹரியானா..

இதுமட்டுமின்றி, வைரஸ் தொற்று ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்கு பரவிவிடாமல் இருப்பதற்காக கிருமி நாசினிகளைக் கொண்டு அவ்வப்போது பேருந்துகள் சுத்தம் செய்யப்பட இருக்கின்றது. தொடர்ந்து, மாதிரிகளை சேகரிக்கும் ஊழியர்கள் முதல் அனைவருக்கும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட இருக்கின்றது. இது அனைவரையும் வைரஸ் தொற்றில் இருந்து தள்ளி வைக்க உதவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gurugram To Uses Bus Fleet For Coronavirus Sample Collection. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X