சதுர வடிவில் உருவாகும் புதிய ஹவால் எஸ்யூவி... ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு...

புதிய ஹவால் எஸ்யூவி மாடலின் டிசைன் ஸ்கெட்ச் படங்களை சீனாவை சேர்ந்த க்ரேட் வால் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வெளிவந்துள்ள இந்த எஸ்யூவி காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சதுர வடிவில் உருவாகும் புதிய ஹவால் எஸ்யூவி... ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு...

ஹவால் ப்ராண்டில் வெளிவரவுள்ள இந்த புதிய எஸ்யூவி மாடலின் ஸ்கெட்ச் படத்தை ஹவால் ப்ராண்ட்டின் தற்போதைய துணை தலைவராகவும் உலகளாவிய டிசைன் இயக்குனராகவும் உள்ள பில் சிம்மோன்ஸ் உருவாக்கியுள்ளார்.

சதுர வடிவில் உருவாகும் புதிய ஹவால் எஸ்யூவி... ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு...

பில் சிம்மோன்ஸ் இதற்கு முன்னர் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிசைன் இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்கெட்ச் படங்கள் புதிய ஹவால் எஸ்யூவி பெட்டகம் வடிவில், வட்டவடிவிலான எட்ஜ்களுடன் தயாரிக்கப்படவுள்ளதை வெளிக்காட்டுகின்றன.

முன்புறம் வளைவாக இல்லாமல் நிமிர்ந்து, பெரிய அளவிலான க்ரில் அமைப்பை மையத்தில் கொண்டுள்ளது. வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் காருக்கு நிச்சயம் ரெட்ரோ தோற்றத்தை வழங்கும். காரின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள அகலமான ஃபெண்டர்கள் தான் காருக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்கும்.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

சதுர வடிவில் உருவாகும் புதிய ஹவால் எஸ்யூவி... ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு...

முன்புறத்தை போன்று இந்த எஸ்யூவி மாடலின் பின்புறமும் நிமிர்ந்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் L-வடிவிலான டெயில் லைட்கள் மற்றும் டெயில்கேட்டில் கூர்மையான க்ரீஸ்கள் உள்ளிட்டவை கவனிக்கத்தக்க வகையில் உள்ளன.

சதுர வடிவில் உருவாகும் புதிய ஹவால் எஸ்யூவி... ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு...

இவை மட்டுமின்றி காரை சுற்றிலும் பாடி க்ளாடிங் வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி இதன் உட்புற கேபினை பற்றியும், என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புகளை பற்றியும் இந்த ஸ்கெட்ச் படங்கள் எதையும் கூறவில்லை. ஆனால் சீனாவில் சில முறை சோதனை ஓட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்டிருந்த இந்த எஸ்யூவி காரின் உட்புற ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன.

சதுர வடிவில் உருவாகும் புதிய ஹவால் எஸ்யூவி... ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு...

அவற்றில் இந்த கார் உட்புற கேபினில் டேஸ்போர்ட்டை ஆக்கிரமித்து பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றிருந்தது. ஆனால் அதே வடிவில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இதன் விற்பனை மாடலில் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. என்ஜின் அமைப்பாக பெட்ரோல் என்ஜினை தயாரிப்பு நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதுர வடிவில் உருவாகும் புதிய ஹவால் எஸ்யூவி... ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு...

இந்த புதிய எஸ்யூவி மாடல் ஹவால் நிறுவனத்தின் எஸ்யூவிகளுக்கான எச் சீரிஸ் அல்லது எஃப் சீரிஸ்-ல் ஒன்றாக இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இது தனி வகையான எஸ்யூவி மாடலாகவே அறிமுகமாகவுள்ளது. பெட்டகம் வடிவிலான தோற்றத்தால் இந்த எஸ்யூவி மாடலுக்கும் தயாரிப்பில் உள்ள மற்றொரு ஹவால் எச்5 மாடலுக்கும் பெரிய அளவில் எந்த தொடர்பும் இருக்காது.

சதுர வடிவில் உருவாகும் புதிய ஹவால் எஸ்யூவி... ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு...

சர்வதேச சந்தையில் ஹவாலின் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்த வருடத்தின் இறுதியில் அறிமுகமாகவுள்ளது. சீனாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள க்ரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவில் ஹவால் ப்ராண்ட் மூலமாக நுழைவதற்கு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 30, 2020, 13:28 [IST]
English summary
New Haval SUV design sketches revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+