இத நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க! ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்

லடாக் எல்லையில் நடைபெற்ற பிரச்னை சீனாவிற்கு பல்வேறு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், அந்நாட்டைச் சார்ந்து இயங்கும் ஓர் நிறுவனம் விநோதமான சிக்கலைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ஆகிய இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கைகளப்பு ஏற்பட்டது. இதில், இரு நாடு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே, இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்படலாம் என்ற பதற்றமான சூழல் உருவாகியது. ஆனால், தற்போதைய இக்கட்டான (கொரோனாவால் ஏற்பட்ட சூழல்) நிலையைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக்கப்பட்டுள்ளது.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

இன்றும் (ஜூன் 30) கூட இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் லடாக்கில் பதற்றத்தை தணிப்பது குறித்து மூன்றாம் கட்ட ஆலோசனையை நடத்தினர்.

இருப்பினும், இந்தியர்களின் மனதில் சீனர்களின் இந்த அடாவடித் தனம் ஆழமாக பதிந்துள்ளது. எனவே, சீனாவின் மீதுள்ள வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக, அந்நாட்டு தயாரிப்பு பொருட்களை தடைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலை தளங்களின் வாயிலாக தொடங்கினர்.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

குறிப்பாக 'பாய்காட் சீனா' என்ற போரை நெட்டிசன்கள் தொடங்கினர். மத்திய அரசும் இதற்கேற்ப டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம் உள்ளிட்ட 59 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு மற்றும் கண்டனம் என இரண்டும் ஒருசார கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பும் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் மூலம் அந்த தடை விளக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

ஆனால், இம்முறை அவ்வாறு இருக்காது என தெரிகின்றது. இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேசமயம், டாடா மற்றும் மாருதி சுசுகி போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிலவும், சீன நிறுவனத்துடனான தொடர்பு மற்றும் வர்த்தகத்தை முறித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

இம்மாதிரியான சூழ்நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த சீன நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரின் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இதற்கு இந்திய-சீனா மோதல் மட்டுமே காரணமில்லை. புதிய மின்சார காரின் பிரவேசத்தின் ஒத்திவைப்பிற்கு மற்றுமொரு காரணமும் இருக்கின்றது. அதுதான் கொரோனா.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள செய்தியிலும் இதையேதான் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கால் தடம் பதிக்க ஆர்வம் காட்டி வரும் நிறுவனங்களில் ஹெய்மா-வும் ஒன்று. இந்த நிறுவனம், தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பேர்டு குழுத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார வாகனங்களை களமிறக்க திட்டமிட்டது. இதனடிப்படையில், ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் பேர்டு எலெக்ட்ரிக் இவி1 என்ற மாடலை அது அறிமுகம் செய்ய இருந்தது.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

இந்தநிலையில்தான், எல்லை விவகாரம் மற்றும் கொரோனா வைரஸ் என இரு நிலைகளில் இந்நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த குறைந்த விலை மின்சார காரின் அறிமுகம் தற்போது தள்ளி போயுள்ளது.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

விலை குறைந்த மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் ஹெய்மா நிறுவனம் அக்காரை முதன் முறையாக காட்சிப்படுத்தியிருந்தது.

இந்த அறிமுகத்தின்போதே பார்வையாளர்கள் பலரின் கவனத்தை அது ஈர்த்தது. இதற்கு அக்கார் மின்சார மாடல் என்பது மட்டுமின்றி, குறைந்த விலையில் அதிக அம்சங்களைக் கொண்டிருந்ததும் ஓர் காரணமாக இருக்கின்றது.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

ஆனால், இதற்குதான் தற்போது ஆப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், எல்லைப் பிரச்னைத் தொடங்கியதும் மஹாராஷ்டிரா அரசு மிக தீர்க்கமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மாநிலத்தில் அமையவிருந்த சீன நிறுவனங்களின் உற்பத்தியாலைகளுக்கு தடைவிதிக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த மாநிலத்தில்தான் கிரேட் வால் மோட்டார்ஸ் மற்றும் ஹெய்மா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிப்பாலைகளை அமைக்க இருந்தன.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

எனவே, அம்மாநில அரசின் அதிரடி முடிவு சீன நிறுவனங்கள் அனைத்திற்கும் முட்டுக் கட்டையாக அமைந்தது. ஆகையால்தான் தற்போது இந்த புதிய நிறுவனங்களின் உதயம் மற்றும் புதுமுக வாகனங்களின் அறிமுகம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

அதேசமயம், ஹெய்மா நிறுவம் உற்பத்தியாலையை மஹாராஷ்டிரா மாநிலம், புனேவிற்கு மிக அருகிலேயே அமைக்க இருப்பதாக தெரிவித்திருந்தது. தற்போது, கொரோனா வைரஸ் இந்த பகுதிலேயே தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், அரசுகள் ஒத்துழைப்பளித்தாலும் கொரோனா வைரஸ் அனைத்து நிறுவனங்களுக்கும் தடை விதிக்கும் சூழலே நிலவி வருகின்றது.

இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க... ஆப்பு செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இல்லை, இவற்றிற்கும்தான்...

இந்த சூழ்நிலையால் பல நிறுவனங்களின் புதுமுக தயாரிப்புகளின் அறிமுகம் கேள்விக் குறியாக மாறியுள்ளது. இதில், பேர்டு எலெக்ட்ரிக் இவி1 ஓர் ஹேட்ச்பேக் ரக மின்சார காரும் ஒன்று. இக்காரின் உருவம் மிகச் சிறியதாக இருந்தாலும் அதில் ஏராளமான அம்சங்கள் காணப்படுகின்றன.

Most Read Articles

English summary
Haima Also Delays Its India Entry. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X