ஃபார்முலா-1 பந்தயத்தில் 7வது முறையாக சாம்பியன்... ஷூமேக்கர் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்!

ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன். மேலும், அவர் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

 ஃபார்முலா-1 பந்தயத்தில் ஷூமேக்கர் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்!

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் ஃபார்முலா-1 க்ரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நேற்று நடந்தது. இந்த ஆண்டுக்கான 14வது சுற்று பந்தயமாக நேற்றைய போட்டி அமைந்தது. இதில், இந்த ஆண்டுக்கான சீசனில் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியானது. நேற்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட பந்தய தூரத்தை 42 நிமிடங்கள் 19.313 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

 ஃபார்முலா-1 பந்தயத்தில் ஷூமேக்கர் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்!

ஃபார்முலா-1 கார் பந்தய வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவராக இருந்து வந்த ஜெர்மனியை சேர்ந்த ஜாம்பவான் வீரர் மைக்கேல் ஷூமேக்கர் சாதனையை லூயிஸ் ஹாமில்டன் சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.

 ஃபார்முலா-1 பந்தயத்தில் ஷூமேக்கர் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்!

கடந்த 2004ம் ஆண்டு முதல் அதிக முறை சாம்பியன் பெற்றவர் என்ற பெருமையை மைக்கேல் ஷூமேக்கர் இருந்து வந்தார். இந்த நிலையில், அவரது சாதனையை ஹாமில்டன் சமன் செய்துள்ளார்.

 ஃபார்முலா-1 பந்தயத்தில் ஷூமேக்கர் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்!

இதுதவிர்த்து, ஃபார்முலா-1 கார் பந்தய வரலாற்றில் அதிக முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும் லூயிஸ் ஹாமில்டன் பெற்றிருக்கிறார். இதுவரை அவர் 94 போட்டிகளில் முதல் இடத்தில் வந்து வெற்றி பெற்றுள்ளார். அதேநேரத்தில், மைக்கேல் ஷூமேக்கர் 91 பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 ஃபார்முலா-1 பந்தயத்தில் ஷூமேக்கர் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்!

கடந்த 2008ம் ஆண்டு முதல்முறையாக ஃபார்முலா-1 சாம்பியன் பட்டத்தை லூயிஸ் ஹாமில்டன் பெற்றார். மிக இளம் வயதில் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, 2014, 2015, 2017, 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தி வருகிறார்.

 ஃபார்முலா-1 பந்தயத்தில் ஷூமேக்கர் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்!

நேற்று நடந்த போட்டியில் ஹாமில்டன் முதல் இடத்தை பிடித்து இந்த ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றார். இரண்டாவது இடத்தை மெர்சிடிஸ் அணியின் மற்றொரு வீரர் செர்ஜியோ பெரேஸும் மூன்றாவது இடத்தை ஃபெராரி அணி வீரர் செபாஸ்டியன் வெட்டலும் பிடித்தனர்.

More from DriveSpark

Article Published On: Monday, November 16, 2020, 11:03 [IST]
English summary
Mercedes driver Hamilton wins in Turkey formula-1 to clinch record equaling 7th world title.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+