க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

சீனாவின் க்ரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கால்பதித்த பின்னர் அறிமுகப்படுத்தவுள்ள முதல் மாடலாக ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவி உள்ளது. இந்த எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

இந்த நிலையில் இந்த புதிய ஹவால் எஸ்யூவி கார் இந்தியாவில் ட்ரக் ஒன்றில் ஏற்றி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆரஞ்ச் நிறத்தில் தோற்றமளித்த இந்த கார் கடந்த பிப்ரவரி மாதத்தில் நொய்டாவில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் கொண்டிருந்த டிசைன் அமைப்புகளை அப்படியே பெற்றுள்ளது.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

சீனாவில் எஸ்யூவி ரக கார்கள் தயாரிப்பில் மிக நீண்ட கால அனுபவம் கொண்ட க்ரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது சந்தையை கட்டமைக்க ரூ.7,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது. புனேக்கு அருகே இந்நிறுவனம் ஏற்கனவே வாங்கிவிட்ட தலேகான் தொழிற்சாலையின் மூலம் வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாடல்களை தயாரிக்க முடியும்.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

க்ரேட்வால் நிறுவனம் இந்திய இன்னிங்ஸை துவங்க தேர்தெடுந்துள்ள ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவி காரின் நீளம் 4,470மிமீ, வீல்பேஸ் 2,680மிமீ. இதன் நீளம் ஜீப் காம்பஸை விட 75 மிமீ-ம், வீல்பேஸ் 44 மிமீ-ம் அதிகம் ஆகும். இதன் முன்னோடி மாடலான ஹவால் எச்6-ன் கட்டமைப்பில் தான் இந்த எஃப்5 மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

ஹவால் எஃப்5 மாடலின் வெளிப்புறத்தில் அனைத்து டிசைன் பாகங்களும் மிகவும் ஸ்டைலாக கொடுக்கப்பட்டுள்ளன. அகலமான முன்புற விண்ட்ஷீல்டை கொண்டுள்ள இந்த காரில் ரூஃப்லைன் மிகவும் சறுக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட்டியான ஷோல்டர் லைன்கள், முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஃபாக்ஸ் ஸ்கிட் ப்ளேட், கிடைமட்டமான டிசைனில் எல்இடி டெயில்லைட்கள், ஃபாக்ஸ் ஏர் டேம்ஸ், க்ரோம் ஆல் தயாரிக்கப்பட்ட எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை இந்த எஸ்யூவி மாடலின் வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும்.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

ஹவால் எஃப்5 எஸ்யூவி மாடலின் உட்புறமும் வெளிப்புறத்திற்கு ஏற்றாற்போல் மிகவும் ப்ரீமியமாக காட்சியளிக்கிறது. உள்ளே 9-இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த கார் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், லெதர் இருக்கைகள், முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், காக்பிட் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

இயக்க ஆற்றலை வழங்க 1.5 லிட்டர் டர்போபெட்ரோல் என்ஜினை இந்த எஸ்யூவி காரில் க்ரேட்வால் நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 166 பிஎச்பி பவரையும், 285 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

இந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற முக்கியமான வசதிகளாக கேபினை சுற்றிலும் விளக்குகள், ஆறு காற்றுப்பைகள், பயணத்திற்கான பாதையை காட்டும் வசதி, 360 கோண கேமிரா, பார்க்கிங் சென்சார்ஸ் போன்றவை உள்ளன. க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எஸ்யூவி காரை தனது முதல் இந்திய மாடலாக அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தவுள்ளது.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

ஆட்டோ எக்ஸ்போவில் ஹவால் எஃப்5 எஸ்யூவி காருடன் அதிக எண்ணிக்கையில் எஸ்யூவிகளையும், எலக்ட்ரிக் மாடல்களையும் ஹவால் மற்றும் க்ரேட்வால் மோட்டார்ஸ் இவி என்ற இரு விதமான ப்ராண்ட்களில் க்ரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவியின் தோற்றம் இதுதான்...!

இதில் வாடிக்கையாளர்கள் பலரது கவனத்தை ஈர்த்த மாடல் என்றால் அது, இந்த ஹவால் எஃப்5 ப்ரீமியம் எஸ்யூவி தான். அறிமுகத்திற்கு பிறகு இந்த எஸ்யூவி காருக்கு விற்பனையில் போட்டி அளிக்க ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்ஸன், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட எஸ்யூவிகள் இந்திய சந்தையில் உள்ளன.

Source: Gaadiwaadi

More from DriveSpark

Article Published On: Monday, March 23, 2020, 14:39 [IST]
English summary
GWM’s Haval F5 Premium SUV (Compass Rival) Spied In India
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+