அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்தியாவில் எப்போது அறிமுகமாக இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஹவல் பிராண்டில் எஃப்-5, எஃப்-7, எஃப்-7எக்ஸ் ஆகிய பல எஸ்யூவி மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது. இதில், ஹவல் எஃப்-7 எஸ்யூவியும், ஹவல் எஃப்-7எக்ஸ் கூபே ரக எஸ்யூவியும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தன.

அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

இந்த நிலையில், ஹவல் எஃப்-7 மற்றும் ஹவல் எஃப்-7எக்ஸ் எஸ்யூவிகளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் முதல் மாடலாக ஹவல் எஃப்-7 எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் கிரேட்வால் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி மாடலானது மிட்சைஸ் ரக எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் கூபே ரக எஸ்யூவி மாடலாக எஃப்-7எக்ஸ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சீனாவை சேர்ந்த செயிக் வாகனத் தயாரிப்பு குழுமம் எப்படி, எம்ஜி பிராண்டில் ஹெக்டர் என்ற மிட்சைஸ் எஸ்யூவியுடன் களமிறங்கியதோ, அதே பாணியை கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனமும் பின்பற்றும் என தெரிகிறது.

அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு இணையான ரகத்தில் ஹவல் எஃப்-7 எஸ்யூவி நிலைநிறுத்தப்படும். இது 5 சீட்டர் மாடலாக இருக்கும். இந்த எஸ்யூவி 4,640 மிமீ நீளமும், 1,846 மிமீ அகலமும், 1,690 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதில், எஃப்-7எக்ஸ் கூபே எஸ்யூவியின் பரிமாணத்தில் மாறுபாடு செய்யப்பட்டு இருக்கிறது. வித்தியாசமான தேர்வை விரும்புபவர்களுக்கு எஃப்-7எக்ஸ் சிறந்த தேர்வாக அமையும்.

அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

ஹவல் எஃப்-7 மற்றும் எஃப்-7எக்ஸ் ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல்களிலுமே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

மறுபுறத்தில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டு எஞ்சின்களுமே 7 ஸ்பீடு டியவூல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். மேலும், ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களிலும் கிடைக்கும். டீசல் எஞ்சின் தேர்வு குறித்தும் கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

புதிய ஹவல் எஃப்7 எஸ்யூவியில் 9.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், பிற வாகனங்களுடன் முன்புறமாக மோதும் வாய்ப்பு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பங்களுடன் வர இருக்கிறது.

அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

புதிய ஹவல் எஃப்-7 மற்றும் எஃப்-7எக்ஸ் ஆகிய இரண்டு எஸ்யூவிகளின் விலை குறித்து இப்போது எதுவும் கணித்து கூற இயலாது. ஆனால், ரூ.14 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம்.

அட்டகாசமான புதிய ஹவல் எஃப்-7 எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்!

புதிய எஃப்-7 மற்றும் எஃப்-7எக்ஸ் ஆகிய எஸ்யூவி மாடல்கள் எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் மாடல்களை குறிவைத்து களமிறக்கப்படும். இதில், எஃப்-7எக்ஸ் மாடலுக்கு நேரடி போட்டி இல்லை. விலை அடிப்படையில் மட்டுமே பிற மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 14, 2020, 14:49 [IST]
English summary
According to report, Chinese car maker, Haval will launch F7 and the F7X SUV models in India by early next year.
மேலும்... #ஹவல் #haval
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+