பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்! கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

பஸ் கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ச்சியாக காணலாம்.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் எண்ணற்ற துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த வைரசால் நோய் பாதிப்பிற்கு ஆளானவர்களைக் காட்டிலும் வறுமை, பஞ்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களே மிக அதிகம். இன்றுகூட இந்திய தடகள விளையாட்டு வீராங்கனை துத்தி சந்த், கொரோனா வைரஸ் பாதிப்பால் சந்தித்து வரும் நிதி நெருக்கடியைப் போக்க தனது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை விற்பனைச் செய்ய முடிவுச் செய்துள்ளார்.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

இதில் கிடைக்கும் பெரும் தொகை வைத்து தனது வரும் கால போட்டிகளுக்கான பயிற்சியை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார். இவ்வாறு கொரோனா வைரஸ் சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களைக் கூட அடிமட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

இந்த நிலைப் போதாதென்று அரசு சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி மக்களை கூடுதல் வஞ்சித்தி வருகின்றது.

இந்த நிலையில்தான் மக்கள் பயன்படுத்தும் பொதுபோக்குவரத்து வாகனங்களின் பயண கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

இந்த அதிரடி முடிவை ஹிமாச்சல அரசே பரிசீலித்து வருகின்றது. இதுகுறித்த தகவலை தி ஆட்டோ எகனாமிக் தளம் வெளியிட்டுள்ளது. இது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, விரைவில் இமாச்சலத்தில் பேருந்தின் கட்டணங்கள் உயர இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தகவலை அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

அதசேமயம், போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து இன்னும் முழுமையாக முடிவெடுக்கப்படவில்லை என அம்மாநில ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை கடந்த ஜூன் 1ம் தேதியே இமாச்சல அரசு தொடங்கியது.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

போக்குவரத்து வெகு நாட்களுக்கு முடக்கப்பட்டிருந்ததால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சீர்படுத்தும் விதமாக பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போது, அம்மாநிலத்தில் ஏசி அல்லாத பேருந்துகளை மட்டுமே இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதுவும், மாநிலத்திற்குள் மட்டுமே போக்குவரத்து வசதி தொடங்கப்பட்டிருக்கின்றது.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

வெளி மாநிலங்களை இணைக்கும் பேருந்து வசதி இன்னும் தொடங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தற்போது தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காட்டுத் தீயை விட அதி தீவரத்தில் பரவி வருவதே இதற்கு முக்கிய காரணம்.

அதேசமயம், இந்த போக்குவரத்தில் அரசு போக்ககுவரத்துறை வாகனங்கள் மாட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தனியார் வாகனங்கள் இதில் பங்கேற்கவில்லை.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

தற்போதைய புதிய விதிகள் அமலில் இருக்கின்ற நிலையில் பேருந்துகளை இயக்கினால் பெரும் நஷ்டம் ஏற்படக்கூடும் எனக் கூறி, கட்டண உயர்விற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த பின்னரே தனியார் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக தற்போது இடைவெளிவிட்டு பயணிகள் அமர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

இதனால், பேருந்தில் 60 முதல் 75 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இதுமட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் பேருந்தை இயக்கினால் பெரும் இழப்பை தனியார் பொதுப் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படலாம். எனவேதான் இவர்கள் சார்பில் அரசிடம் கட்டண உயர்விற்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

இதுகுறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி நல்ல முடிவெடுக்கப்படும் என கூறியதாக அம்மாநில தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் ரமேஷ் கமல் தெரிவித்துள்ளார். அவ்வாறு, அரசு சார்பில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டால் 20 முதல் 25 சதவீத வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

இதற்கு முன்பாக கடந்த இரண்டு முன்புதான் அம்மாநில அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தியது. அப்போது 25 சதவீத உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்... கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க!

இந்த நிலையில், தற்போதைய கொரோனா இக்கட்டான காலத்தில் இதேமாதிரியான பேருந்து கட்டண உயர்வை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது இமாச்சல மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Himachal Govt Planning To Hike Bus Fares. Read In Tamil.
Story first published: Tuesday, July 14, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X