புதிய மாடலுடன் 4-ம் தலைமுறை சிட்டி காரும் விற்பனையில் தொடரும்: ஹோண்டா அறிவிப்பு

நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் வழங்கப்பட உள்ள வேரியண்ட்டுகள் மற்றும் அதன் விலை விபரம் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய மாடலுடன் 4-ம் தலைமுறை சிட்டி காரும் விற்பனையில் தொடரும்: ஹோண்டா அறிவிப்பு

கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தலைமுறை அம்சங்களுடன் கூடிய புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின் என அனைத்திலும் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இந்த புதிய சிட்டி கார் பழைய மாடலைவிட விலையிலும் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டது.

புதிய மாடலுடன் 4-ம் தலைமுறை சிட்டி காரும் விற்பனையில் தொடரும்: ஹோண்டா அறிவிப்பு

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில் முந்தைய தலைமுறையாக விற்பனையில் இருந்த நான்காம் தலைமுறை சிட்டி கார் மாடலையும் தொடர்ந்து விற்பனை செய்ய ஹோண்டா இந்தியா நிறுவனம் முடிவு செய்தது.

புதிய மாடலுடன் 4-ம் தலைமுறை சிட்டி காரும் விற்பனையில் தொடரும்: ஹோண்டா அறிவிப்பு

அதன்படி, இனி நான்காம் தலைமுறை மாடலானது பெட்ரோல் எஞ்சின் தேர்வில் SV மற்றும் V என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படும் என்று ஹோண்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது. சிட்டி SV வேரியண்ட்டிற்கு ரூ.9.29,900 லட்சம் விலையும், V வேரியண்ட்டிற்கு ரூ.9,99,900 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாடலுடன் 4-ம் தலைமுறை சிட்டி காரும் விற்பனையில் தொடரும்: ஹோண்டா அறிவிப்பு

நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் பிஎஸ்-6 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படவில்லை.

புதிய மாடலுடன் 4-ம் தலைமுறை சிட்டி காரும் விற்பனையில் தொடரும்: ஹோண்டா அறிவிப்பு

இதனிடையே, ஐந்தாம் தலைமுறை மாடலாக விற்பனைக்கு வந்த புதிய ஹோண்டா சிட்டி கார் ரூ.10.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

புதிய மாடலுடன் 4-ம் தலைமுறை சிட்டி காரும் விற்பனையில் தொடரும்: ஹோண்டா அறிவிப்பு

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுதான் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்டுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்தலது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய மாடலுடன் 4-ம் தலைமுறை சிட்டி காரும் விற்பனையில் தொடரும்: ஹோண்டா அறிவிப்பு

ஐந்தாம் தலைமுறை மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். புதிய ஹோண்டா சிட்டி கார் V, VX மற்றும் ZX ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பிரிமீயம் மாடலாகவும், பழைய மாடல் பட்ஜெட் வாடிக்கையாளர்களை குறிவைத்தும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

English summary
Honda has announced the continuation of 4th Generation City In India and realigned the variants.
Story first published: Tuesday, September 1, 2020, 16:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X