ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வண்ணப் பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

ஹோண்டா கார்களின் பாடி பேனல்கள் மற்றும் வண்ணப் பூச்சு தொடர்பான பணிகளுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சேமிப்புச் சலுகைகளையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

பொதுவாக கார்களின் எஞ்சின், ஏசி, எலெக்ட்ரிக்கல் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. பெரிய அளவிலான இதர பணிகளுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்கள் அறிவிக்கப்படுவதில்லை.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதத்தில், பாடி பேனல்கள் மற்றும் இதர சேதங்களை சரி செய்வதற்காக சிறப்பு முகாமை ஹோண்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

செப்டம்பர் 14 (நேற்று) முதல் வரும் 26ந் தேதி வரை 13 நாட்களுக்கு இந்த சிறப்பு சர்வீஸ் முகாம் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஹோண்டா கார் ஷோரூம்களிலும் இந்த பணிகள் நடத்தப்படுகின்றது.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

இந்த சர்வீஸ் முகாமில் தங்களது கார்களில் பாடி ஒர்க் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வழங்குவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. காரின் விண்ட்ஷீல்டு, சைடு மிரர், பம்பர் உள்ளிட்ட பாகங்களில் இருக்கும் சேதங்களை சரிசெய்வதற்கும், வர்ண பூச்சு வேலைகளுக்கும் லேபர் கட்டணத்தில் சலுகை வழங்குவதாக ஹோண்டா தெரிவிக்கிறது.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

காரின் உட்புற பாகங்களை சரிசெய்வது, வர்ண பூச்சு வேலைகள், அழகுப்படுத்துததல், கிருமி நீக்கப் பணிகளும் இந்த சர்வீஸ் முகாமின் மூலமாக செய்து கொள்ளலாம் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

காருக்கு இலவச பாடி வாஷ், பேட்டரிக்கு பை-பேக் சலுகை, பாடி மற்றும் வர்ணப் பூச்சு பணிகளுக்கான மதிப்பீடு உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு உள்ளது.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

இதுகுறித்து ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் கூறுகையில்,"வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதத்தில் அனைத்து ஹோண்டா டீலர்களிலும் பாடி ஒர்க் மற்றும் பெயிண்ட் வேலைகளுக்கான இந்த சர்வீஸ் முக்ம் நடத்தப்படுகிறது. எமது வாடிக்கையாளர்கள் கார்களை புதிது போல் பராமரிப்பதற்கான வாய்ப்பை இந்த சர்வீஸ் முகாம் வழங்கும். இந்த வாய்ப்பை தவறாமல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

இந்த சர்வீஸ் முகாமில் தங்களது கார்களை சரிசெய்து கொள்வதற்கு விரும்பும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது அருகாமையிலுள்ள ஹோண்டா டீலரில் முன்பதிவு செய்து கொள்வது குறித்த நேரத்தில் பணிகளை முடித்து தருவதற்கும், தேவையற்ற நேர விரயத்தையும் தவிர்க்க உதவும் என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

ஹோண்டா கனெக்டெட் செயலி, இணையதளம் மற்றும் டீலர்களில் நேரடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து ஹோண்டா டீலர்களிலும் முழுமையான பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்களில் பாடி ஒர்க் மற்றும் வர்ண பூச்சுக்காக சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிப்பு!

இந்த சிறப்பு சர்வீஸ் முகாம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மதிப்பை வழங்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை அருகாமையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Honda Cars India Limited announced a 'Body & Paint Service Camp' for its customers in the country. The company is giving its customers a chance to get their cars to repair for any damage.
Story first published: Tuesday, September 15, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X