புதிய ஹோண்டா சிட்டி கார் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி உள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்திய அறிமுக தேதி வெளியானது!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை கருத்தில் கொண்டு முற்றிலும் புதிய மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்திய அறிமுக தேதி வெளியானது!

வரும் மார்ச் 16ந் தேதி புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய ஹோண்டா சிட்டி கார் டிசைன், வசதிகள், எஞ்சின் என அனைத்திலும் புதிய மாடலாக வர இருக்கிறது. ஹோண்டா சிவிக் கார் போன்ற டிசைன் அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகளுடன் அதிக வசீகரமாக இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்திய அறிமுக தேதி வெளியானது!

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய ஹோண்டா சிட்டி காரில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய ஹோண்டா சிட்டி காரின் ஆர்எஸ் டர்போ மாடலும் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த காரில் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கூடுதல் வசீகரத்தை பெற்றிருக்கிறது.

ஹோண்டா சிட்டி ஆர்எஸ் மாடலின் வசீகரமான தோற்றத்திற்கு ஏற்றாற்போல், இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 122 பிஎச்பி பவரையும், 173 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்திய அறிமுக தேதி வெளியானது!

தற்போது ஹோண்டா சிட்டி கார் ரூ.9.91 லட்சம் முதல் ரூ.14.31 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல் ரூ.10.5 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கலாம்.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2020, 9:56 [IST]
English summary
Japan based auto manufacturer, Honda, has announced that it will unveil the all new fifth-generation Honda City on 16 March.
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+