ஹேட்ச்பேக் கார்களைவிட அதிக மைலேஜ்... அசத்தும் ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல்!

மிக கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹேட்ச்பேக் கார்களை விஞ்சும் அளவுக்கு சிறப்பான மைலேஜ் கொண்டதாக ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் மாடல் வர இருக்கிறது.

 மைலேஜில் அசத்த வரும் புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல்!

எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிவிக் கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.பிஎஸ்6 மாசு உமிழ்வு தக்கவாறு ஹோண்டா சிவிக் பெட்ரோல் மாடல் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில், டீசல் எஞ்சினும் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 மைலேஜில் அசத்த வரும் புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல்!

கொரோனா பிரச்னைகளிலிருந்து விடுபட்டு டீலர்கள் செயல்பாடுகள் துவங்கி இருப்பதால், தற்போது சிவிக் டீசல் மாடலுக்கு முன்பதிவை துவங்கி இருக்கிறது ஹோண்டா நிறுவனம்.

 மைலேஜில் அசத்த வரும் புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல்!

ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலில் மேம்படுத்தப்பட்ட 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 மைலேஜில் அசத்த வரும் புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல்!

புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 மைலேஜில் அசத்த வரும் புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல்!

ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் மாடலின் எஞ்சின் பிஎஸ்4 மாடலுக்கு இணையான மைலேஜை வழங்கும் என்று தெரிய வந்துள்ளது. அதாவது, லிட்டருக்கு 26.8 கிமீ மைலேஜை இந்த கார் வழங்கும் என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும்.

சில ஹேட்ச்பேக் கார்களைவிட அதிக மைலேஜை வழங்கும் திறனுடன் இந்த எக்ஸிகியூட்டிவ் செடான் டீசல் மாடல் வர இருக்கிறது.

 மைலேஜில் அசத்த வரும் புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல்!

எஞ்சினை தவிர்த்து சிறப்பம்சங்கள்தான் டீசல் மாடலிலும் வழங்கப்பட உள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், சி வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்பாய்லர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 மைலேஜில் அசத்த வரும் புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல்!

புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் மாடலில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, வாய்ஸ் கமாண்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

 மைலேஜில் அசத்த வரும் புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல்!

ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட கார் மாடல்களு"ன் புதிய ஹோண்டா சிவிக் கார் பிஎஸ்6 மாடல் போட்டி போடும். இந்த ரகத்தில் மிகவும் மதிப்புவாய்ந்த மாடலாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

Most Read Articles

English summary
The Honda Civic BS6 diesel bookings are underway in the Indian market. The company announced the commencement of bookings for the diesel sedan variant on its website ahead of the launch.
Story first published: Wednesday, June 17, 2020, 14:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X