உச்சத்தில் கொரோனா வைரஸ்.. ஊர் சுற்ற புது யுக்திகளை கையாளும் இளைஞர்கள்.. இந்த நேரத்திலுமா இப்படி..?
கடந்த காலங்களைக் காட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கின்ற நிலையில், இளைஞர்கள் பலர் புது யுக்திகளைக் கையாண்டு வெளியில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் முன்பைக் காட்டிலும் தற்போதே பல மடங்கு அதிக வேகத்தில் தொற்றை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு தமிழகத்தின் முழு பாதிப்பில் அரை எண்ணிக்கை கிருமி தொற்றை பெற்றிருக்கும் சென்னையே முக்கிய சான்றாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டாகவும் சென்னை தற்போது உருவெடுத்து வருகின்றது.

இதனால், தமிழகத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதியாக தலைநகர் மாறியிருக்கின்றது. சென்னையின் இத்தகைய நிலைக்கு அஜாக்கிரத்தையாக செயல்படும் மக்களே காரணம் என அரசு தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதிச் செய்யும் வகையில் மக்கள் பலர் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரும் வெளியில் நடமாடிய வண்ணம் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
குறிப்பாக, மாஸ்க் போன்ற பாதுகாப்பு அம்சம் ஏதும் இல்லாமல் அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாகவே தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் காணப்படுகின்றது.

குறிப்பாக இளைஞர்கள் ஒரு சிலர் தேவையற்ற நிலையில் இரு சக்கர வாகனம் அல்லது கார்கள் மூலம் வெளியே சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இவர்களால் ஊரடங்கு உத்தரவு சீர்குலைவது மட்டுமின்றி வைரஸ் தொற்று அதிகரிக்கும் அபாயமும் ஏற்படுகின்றது. இந்த நிலை சென்னையில் மட்டுமின்றி நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இதே மாதிரியான சூழல்தான் காணப்படுகின்றது.

இதனை உறுதிச் செய்கின்ற வகையிலான ஓர் சம்பவம் தற்போது மும்பையில் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் போலீஸாரின் கெடுபிடியில் இருந்து தப்பிப்பதற்காக இளைஞர் ஒருவர் விநோதமான யுக்தியைக் கையாண்டுள்ளார்.
அதாவது, அவர் ஓர் எம்எல்ஏ என்பதை சித்தரிக்கும் வகையில், அம்மாநிலத்தில் எம்எல்ஏக்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படும் ஸ்டிக்கர் ஒன்றை ஹோண்டா சிவிக் காரின் வின்ட்-ஷீல்டு பகுதியில் ஒட்டியுள்ளார்.

இதுபோன்ற ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றால், பெரும்பாலான போலீஸார் விசாரணை ஏதும் செய்யாமல் விட்டுவிடுவார்கள் என நினைத்தே அந்த இளைஞர் எம்எல்ஏ ஸ்டிக்கரைப் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், எம்எல்ஏ தொகுதி மக்களை நலம் விசாரிக்க செல்கிறார் என நினைத்து போலீஸார் அதிக ஆய்வை மேற்கொள்ள மாட்டார்கள் என்ற கர்ப்பனையில் மும்பையை வளம் வரவும் அந்த இளைஞர் ஆரம்பித்துள்ளார்.

ஆனால், இளைஞரின் எண்ணத்திற்கு முழுவதும் அப்பாற்பட்டு செயலாற்றிய போலீஸார், அவரை கேள்வியால் துருவியெடுத்தனர். அப்போதுதான் அவர் ஹோண்டா சிவிக் காரில் பயன்படுத்திய எம்எல்ஏ ஸ்டிக்கர் போலியானது என்பது தெரியவந்தது.
மேலும், போலீஸாரின் விசாரணையில் இளைஞருக்கும், மஹாராஷ்டிரா மாநிலத்தின் எந்தவொரு எம்எல்ஏ-வுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர் மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வரும் சாபெத் அஸ்லாம் ஷா என்பது தெரியவந்தது. 20 வயதான அந்த இளைஞர் வணகவியல் இரண்டாம் படித்து வருகின்றார். இந்நிலையிலேயே அவர் ஜாலியாக வலம் வருவதற்காகவே போலி எம்எல்ஏ ஸ்டிக்கரை பயன்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் போலீஸார் தற்போது தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்ற வேலையில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக தவிர்க்கின்ற வகையிலான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக, ஆங்காங்கே செக்-போஸ்டுகள் அமைத்து வெளியில் வரும் மக்களை தீவிர ஆய்விற்கு உட்படுத்துகின்றனர். இம்மாதிரியான ஆய்வின்போதே இளைஞர் சாபெத் அஸ்லாம் போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றார். அவரை வெஸ்டர்ன் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ பிரசாத் உணவகத்தின் அருகில் வைத்தே காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

அப்போது, இந்த ஸ்டிக்காரை தான் தெரியாமல் பயன்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும், இம்முறை மன்னித்துவிடுங்கள், இதன் பின்னர் இதுபோன்ற தவறுகளில் நான் ஈடுபட மாட்டேன் என வாக்குறுதி அளித்தார். இருப்பினும், பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, அவர் தற்போது பெயிலில் வெளியே வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உரிய விசாரணைக்காக காரை மட்டும் போலீஸார் தற்போது பறிமுதல் செய்து வைத்திருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் அமலுக்கு வந்த தேசிய ஊரடங்கு தற்போது வரையிலும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

இந்த உத்தரவினால் ஏழை, எளிய மற்றும் தினக் கூலி மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதன்காரணமாக, சில நிறுவனங்களுக்கு மட்டும் அரசு லேசான தளர்வு இன்று முதல் வழங்கியிருக்கின்றது.
இருப்பினும், ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டே நிலையேக் காணப்படுகின்றது.

குறிப்பாக, மாஸ்க் போன்ற பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் வெளியில் நாடுமாடுவோர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். அதேசமயம், சாபெத் அஸ்லாம் போல் விதிமீறல்வாதிகளுக்கு கூடுதல் சிறப்பு கவனம் செலுத்தி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








