ஹோண்டா கார்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

கொரோனாவால் வீழ்ந்த வர்த்தகத்தை மீட்டெடுக்கும் விதமாக, சிறப்பு கார் கடன் திட்டங்களை ஹோண்டா அறிவித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா கார்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

கொரோனா பிரச்னையால் கார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. கார் வர்த்தகத்தை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதையும் உணர்ந்து கொண்டுள்ளன. நிலைமை சீரடைய பல மாதங்கள் பிடிக்கும் நிலை இருக்கிறது.

ஹோண்டா கார்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

அதேபோன்று, தேசிய ஊரடங்கு நீடிப்பதும், கொரோனா தொற்று வேகம் அதிகரித்திருப்பதும் சூழ்நிலையை சிக்கலாகி வருகிறது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்களின் சூழல்களையும் மனதில் வைத்து சிறப்பு கார் கடன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா கார்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

குறைந்த வட்டி விகிதம், திருப்பி செலுத்துவதற்கு ஏதுவாக நீண்ட கால தவணை திட்டங்கள், முதல் மூன்று மாதங்களுக்கு சுமை இல்லாத வகையில் மிக குறைவான மாதத் தவணையுடன் இந்த கார் கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

ஹோண்டா கார்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

சிட்டி காருக்கு 5 ஆண்டுகளுக்கான கார் கடன் திட்டமானது 6.99 வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. மேலும், முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.999 என்ற மாதத் தவணை மட்டும் செலுத்தினால் போதுமானது. எனவே, புதிய கார் வாங்கியவுடன் இருக்கும் சுமை வெகுவாக குறையும். கோடக் மஹிந்திரா பிரைம் லிமிடேட் இணைந்து இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறது.

ஹோண்டா கார்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

அடுத்து எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்து சிறப்பு கார் கடன் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது ஹோண்டா கார் நிறுவனம். அதிகபட்சமாக 7 ஆண்டுகள் மாதத் தவணையை திருப்பி செலுத்தும் கால அளவுடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், முதலில் குறைவான மாதத் தவணையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்ட மாதத் தவணையையும் செலுத்தும் திட்டமும் உள்ளது.

ஹோண்டா கார்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

முதல் சில ஆண்டுகளுக்கு குறைவான மாதத் தவணையும், கடைசியில் ஒரே பெரிய தொகையை செலுத்தி கடனை முடிக்கும் சிறப்பு திட்டத்தையும் செலுத்தும் வகையில் சிறப்பு கார் கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் கடன் திட்டங்களுக்கு 9.25 சதவீத வட்டிவிகிதத்தில் கிடைக்கும்.

ஹோண்டா கார்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய சிட்டி காரை வாங்குவோருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் சேமிப்பும் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு கார் கடன் திட்டங்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சேமிப்புச் சலுகைகள் புதிய ஹோண்டா சிட்டி காரை வாங்குவதை எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda has introduced easy car loan schemes for customers to revive the sales in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X