அடேங்கப்பா நம்பவே முடியல... ஹோண்டா ஜாஸ் கார் இவ்ளோ பாதுகாப்பானதா..? வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்!
ஹோண்டா ஜாஸ் காரின் பாதுகாப்பு திறன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டாவின் புதிய தலைமுறை ஜாஸ் கார் பாதுகாப்பு திறன்குறித்த பரிசோதனையில் ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பிற்கு மிக உகந்த கார் என்பதற்கான அர்த்தமே இது. ஹோண்டா ஜாஸ் காருக்கான இந்த நற்சான்றை யூரோ என்சிஏபி அமைப்பே தற்போது வழங்கியிருக்கின்றது.

கார்களை மோதல் வினைக்கு உட்படுத்தி அதுகுறித்த தகவலை யூரோ என்சிஏபி வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில் இந்த அமைப்பு உலகின் முன்னணி நிறுவனங்களின் புதுமுக கார்களை விபத்து பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதில் ஒன்றே ஹோண்டா ஜாஸ். இக்காரை பரிசோதித்ததில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்களை அது பெற்றது.

குறிப்பாக பெரியவர்களின் பாதுகாப்பில் 38 புள்ளிகளுக்கு33.1 புள்ளிகளையும், சிறியவர்களின் பாதுகாப்பில் 24 புள்ளிகளுக்கு 22.4 புள்ளிகளையும் ஹோண்டா ஜாஸ் பெற்றிருக்கின்றது. காரை முகப்பு பகுதி, பக்கவாட்டு பகுதி பன்முக நிலைகளில் யூரோ என்சிஏபி மோதலில் ஈடுபடுத்தி ஆய்வு செய்தது. இவற்றின் அடிப்படையிலேயே மேற்கூறிய தர மதிப்புகளை ஹோண்டா ஜாஸ் பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி பாதசாரிகளுக்கு பாதுகாப்பளிப்பதிலும் இக்கார் நல்ல ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றது. 36க்கு 28.3 புள்ளிகளை அது பெற்றுள்ளது. இதுபோன்ற தனித்துவமான புள்ளிகளின் காரணமாக இக்காருக்கு ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது.

சோதனைக்கு உட்படுத்தியது ஐரோப்பிய சந்தைகளுக்கான ஹோண்டா ஜாஸ் ஆகும். இது 1.5 ஹைபிரிட் எலிகென்ஸ் எல்எக்டி வேரியண்ட். இதில், பாதுகாப்பு அம்சங்களாக கிராஷ் புரொடெக்ஷன், ஏர் பேக், சீட் பெல்ட், ஓட்டுநரின் கால்களை பாதுகாக்கின்ற வகையில் ஏர் பேக் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, குழைந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சமாக ஐசோபிக்ஸ் இருக்கை மவுண்டுகள் மற்றும் ஏஇபி, ஸ்பீடு அசிஸ்டன்ட்ஸ், லேண் அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களையும் அது பெற்றிருக்கின்றது. இதுபோன்ற பன்முக பாதுகாப்பு கவசங்களை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்களை இக்கார் பெற்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








