விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!

அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்பெஷலான ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் போட்டி மிக கடுமையாக உள்ளது. அண்மையில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் மூலமாக இந்த ரகத்தில் இருக்கும் மாடல்களுக்கு கடும் நெருக்கடி வந்துள்ளது. இந்த நிலையில், இந்த ரகத்தில் தனித்துவமான தேர்வாக ஹோண்டா சிஆர்வி இருந்து வருகிறது.

விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!

எனினும், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்கிக் கொள்ளும் வகையில், சிஆர்வி எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் இந்தியாவில் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டு உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!

மொத்தமாக 45 யூனிட்டுகள் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளதாம். இந்த லிமிடேட் எடிசனுக்கு ரூ.29.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. சாதாரண வேரியண்ட்டை விட ரூ.1.23 லட்சம் கூடுதல் விலையில் இந்த லிமிடேட் எடிசன் வர இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் மாடலில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 152 பிஎச்பி பவரையும், 189 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சிஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையில், தனித்துவமான சில கூடுதல் அம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருந்த மாடலைவிட வடிவமைப்ில் சிறிய மாற்றங்களை செய்யப்பட்டு வர இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!

ஆக்டிவ் கார்னரிங் எல்இடி ஹெட்லைட்டுகள், முன்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஃபோல்டு விங் மிரர்கள், ஒளி உமிழ் பின்னணியுடன் கூடிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டோர் சில் கார்டுகள், ரன்னிங் போர்டுகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!

இந்த காரில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வசதியுடன் டெயில் கேட், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் முன்புற பயணி இருக்கை ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!

ஸ்பெஷல் எடிசன் மாடல் என்பதை காட்டுவதற்காக வெளிப்புறத்தில் பேட்ஜ் மற்றும் கூடுதலாக அலங்கார ஸ்டிக்கர்களுடன் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் இந்த மாடல் தனித்துவமான தேர்வாக நிலைநிறுத்துவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 22, 2020, 14:32 [IST]
English summary
According to report, Honda is planning to launch CR-V special edition model in India very soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+