புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

ஹோண்டா பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்திய புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த காரின் வேரியண்ட்டுகள் மற்றும் அதில் வழங்கப்படும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

மேம்படுத்தப்பட்ட மாடல்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டை குறிவைத்து ஹோண்டா டபிள்யூஆர்வி கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில் இதன் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்6 தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வந்துள்ளது. வடிவமைப்பு, வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

வேரியண்ட் விபரம்

பெட்ரோல், டீசல் மாடல்களானது எஸ்வி மற்றும் விஎக்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் கொடுக்கப்படும் வசதிகள் விபரத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

SV வேரியண்ட்

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், பவர் விண்டோஸ், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, பாடி கிளாடிங், பிரிமீயம் ஃபேப்ரிக் இருக்கைகள், டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், டஸ்ட் ஃபில்டர், பனி விளக்குகள், ரியர் டீஃபாகர், ஸ்கிட் பிளேட் ஆகியவை உள்ளன.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

இந்த வேரியண்ட்டில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, டிஜிபேடு 2.0 கன்டரோல் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட், வாய்ஸ் கமாண்ட், 4 ஸ்பீக்கர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் வழங்கப்படுகின்றன. இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டே/நைட் ரியர் வியூ மிரர், ரியர் டீஃபாகர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

VX வேரியண்ட் வசதிகள் விபரம்

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்வி வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் கூடுதலாக எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பவர் ஃபோல்டிங் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், கீ லெஸ் என்ட்ரி, லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்களுடன் மியூசிக் சிஸ்டம், 2 யுஎஸ்பி போர்ட்டுகள், 2 சார்ஜிங் பாயிண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

எஞ்சின் செயல்திறன்

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரில் வழங்கப்படும் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. டீசல் மாடலில் இருக்கும் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.7 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

விலை விபரம்

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் எஸ்வி வேரியண்ட் ரூ.8.50 லட்சம் விலையிலும், டீசல் எஸ்வி வேரியண்ட் ரூ.9.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். அதேபோன்று, பெட்ரோல் விஎக்ஸ் வேரியண்ட் ரூ.9.80 லட்சம் விலையிலும், 1.5 லிட்டர் டீசல் விஎக்ஸ் வேரியண்ட் ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இதன் டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் விஎக்ஸ் வேரியண்ட் போட்டியாளர்களைவிட அதிக மதிப்புவாய்ந்ததாக இருக்கும் என்று கருதலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 3, 2020, 10:57 [IST]
English summary
Here are the variant wise features of the new Honda WR-V compact SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+