புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியீடு... முன்பதிவு துவங்கியது!

புதிய பொலிவுடன் ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கு முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியீடு... முன்பதிவு துவங்கியது!

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையில் எஸ்யூவி தகவமைப்புகளுடன் உருவாக்கபட்ட மாடல் டபிள்யூஆர்வி. காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து இந்த க்ராஸ்ஓவர் ரக கார் நிலைநிறுத்தப்பட்டது. எதிர்பார்த்ததைவிட இந்த காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியீடு... முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், சந்தைப் போட்டி கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் வகையில் வடிவமைப்பு மற்றும் வசதிகளில் ஹோண்டா டபிள்யூஆர்வி கார் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியீடு... முன்பதிவு துவங்கியது!

இந்த புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அத்துடன், ரூ.21,000 முன்பணத்துடன் நாடு முழுவதும் உள்ள ஹோண்டா கார் டீலர்களில் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியீடு... முன்பதிவு துவங்கியது!

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் முகப்பு டிசைனில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய க்ரில் அமைப்பு அமைப்பு, பம்பர் அமைப்பு, சில்வர் வண்ண ஸ்கிட் பிளேட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியீடு... முன்பதிவு துவங்கியது!

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் வர இருக்கிறது. இது நிச்சயம் இந்த காரின் மதிப்பை உயர்த்தும் முக்கிய விஷயமாக இருக்கும்.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியீடு... முன்பதிவு துவங்கியது!

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரில் ஏற்கனவே வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியீடு... முன்பதிவு துவங்கியது!

பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் வெளியீடு... முன்பதிவு துவங்கியது!

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. தற்போது இந்த கார் ரூ.8.08 லட்சம் முதல் ரூ.10.48 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய மாடலின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 7, 2020, 10:21 [IST]
English summary
Japanese car maker, Honda Cars has commenced bookings for the WR-V Facelift model in India and It will be launched later this month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+