இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

சொகுசு வசதிக்கு பெயர்போன கார்களில் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும் ஒன்று. இந்நிறுவனத்தின் வி-கிளாஸ் காரில் வழங்கப்பட்ட லக்சூரி அம்சங்கள் போதாதென்று கூடுதல் சொகுசு அம்சங்களை பிரபல நடிகர் பல லட்சம் செலவில் கூடுதலாக சேர்த்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

பிரபல தொழிலதிபர்களையே வாயை பிளக்கை வைக்கின்ற அளவிற்கு சொகுசு வாழ்க்கைக்கு பெயர்போனவர்களாக நடிகர்கள் இருக்கின்றனர். பெரும்பாலான நடிகர்கள் பயன்படுத்தும் விலையுயர்ந்த கார்களே இதற்கு சான்றாக இருக்கின்றது.

நடிகர்கள் தங்களின் அழகு மற்றும் உடைகளுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களோ, அதைவிட பல மடங்கு அதிக முக்கியத்துவத்தை அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு கொடுக்கின்றனர்.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

குறிப்பாக, அவர்கள் பயன்படுத்தும் கார்கள் அவர்களைப் போலவே கவர்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அதேசமயம், அதில் சொகுசு வசதிகளுக்கு பஞ்சமிருக்கக்கூடாது என்பதற்கும் முக்கியத்துவம் காட்டுகின்றனர். நடிகர்களின் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவம் தற்போது இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

நம்மில் பலர் பாலிவுட் திரைப்படங்களைப் பார்க்கவில்லை என்றாலும், அதில் நடிக்கும் சில பிரபலங்களைப் பற்றி அறிந்திருப்போம். அந்தவகையில், இந்தி திரைப்பட உலகின் மிகவும் புகழ்வாய்ந்த நடிகர்களில் ஒருவரான ஹ்ரித்திக் ரோஷனின் விநோதமான செயலைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணவிருக்கின்றோம். இவர்தான், அவரது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் வி-கிளாஸ் காரில் சொகுசு வசதிகள் போதவில்லை என கூடுதல் சொகுசு அம்சங்களை மாடிஃபிகேஷன் மூலம் சேர்த்துள்ளார்.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

பொதுவாக, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்கவிரும்பும் பலர் அந்த காரில் வழங்கப்பட்டிருக்கும் அதிக லக்சூரி அம்சங்களுக்காக மட்டுமே அதன் மீது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவர்களில் ஹ்ரித்திக் சற்று வித்தியாசமாக காணப்படுகின்றார். அவரின் மாடிஃபிகேஷன் நடவடிக்கைக்கு ஒன்று மட்டுமே காரணமாக கூறப்படுகின்றது.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

அதாவது, பென்ஸ் வி-கிளாஸ் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் சொகுசு வசதியில் திருப்தி இல்லாத காரணத்தினாலயே, அந்த காருக்கு கூடுதல் பிரிமியம் வசதிகளைச் சேர்க்கும் விதமாக சற்று வித்தியாசமாக அவர் நடந்துக் கொண்டுள்ளார்.

இதற்காக, இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாடிஃபிகேஷன் நிறுவனமான டிசி2-வை அவர் நாடியிருக்கின்றனர்.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

இந்நிறுவனம், அவரது மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் காரை வேற லெவல் சொகுசு அம்சத்திற்கு செய்திருக்கின்றது. இதற்காக பல்வேறு மாற்றங்களை ஹ்ரித்திக் ரோஷனின் விருப்பத்தின் அடிப்படையில் அது செய்து முடித்துள்ளது.

குறிப்பிட்ட மாற்றங்களால் பென்ஸ் வி-கிளாஸ் கார் தற்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு இணையாக மாற்றமடைந்துள்ளது.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

இதற்காக அந்த கார் அதன் இன்டீரியர் பக்கத்தில் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. இந்த மாற்றம் லிமோசைன் எனப்படும் அதிக சொகுசு வசதியுடைய காரில் காணப்படுவதைப் போன்று உள்ளது. அதற்கேற்ப கூடுதல் ராயல் லுக்கை வழங்குகின்ற வகையில் ப்ளூர் மற்றும் மேற்கூரைப் பகுதி காட்சியளிக்கின்றது. மேலும், முன்னதாக இருந்ததைக் காட்டிலும் கூடுதல் மிருதுவான இருக்கை வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

மேலும், தனியறையில் இருக்கும் உணர்வை வழங்குகின்ற வகையில் நான்கு இருக்கைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கும் டிரைவர் கேபினுக்கும் நேரடி தொடர்பு இருக்காது. ஆகையால், 5 நட்சத்திர விடுதியில் தனியாக தங்கியிருப்பதைப் போன்ற அனுபவம் இந்த காரில் பயணிக்கும்போது இருக்கும். தொடர்ந்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணிக்கும் உல்லாச கூல்ட் ட்ரிங்குடன் பயணத்தை அனுபவிப்பதற்கு ஏதுவாக சாப்பாடு மற்றும் வாட்டர் பாட்டில் ஹோல்டிங் மேடை நிறுவப்பட்டிருக்கின்றது.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

இதில், கூல் டிரிங் ஹோல்டர் எப்போதும் டிரங்ஸ்களை கூலாக வைத்துக் கொள்ள உதவும். இத்துடன், பப்பில் இருப்பதைப் போன்ற உணர்வை வழங்குவதற்காக ப்ளூ மற்றும் வெண்மை நிற மின் விளக்குகள் கேபினுக்குள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் ரம்மியமான அனுபவத்தை வழங்க உதவும். இவ்வாறு, ஏராளமான சொகுசு அம்சங்களை ஹ்ரித்திக்கின் விருப்பத்திற்கேற்ப டிசி2 நிறுவனம் இந்த காரில் வாரி வழங்கியிருக்கின்றது.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

இதில் மாற்றம் செய்யப்படாததாக காரின் எஞ்ஜின் மட்டுமே உள்ளது. 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜினை இந்த கார் ஏந்தியுள்ளது. இது, அதிகபட்சமாக 163 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்தி வி-கிளாஸ் கார்கள் ரூ. 68.4 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ!

ஆனால், ஹ்ரித்திக் ரோஷனின் இந்த கார் ரூ. 1.46 கோடி ஆகும். இது, இந்த மாடலில் விற்பனையாகும் உயர்நிலை ட்ரிம் மார்கோ போலோ ஆகும். இதைதான் தற்போது கூடுதல் காஸ்ட்லியாக்கும் வகையில் அவர் மாடிஃபை செய்துள்ளார். இந்த மாடிஃபிகேஷனுக்காக அவர் ரூ. 9.5 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், ஹ்ரித்திக் ரோஷனின் கார் கூடுதல் விலையுயர்ந்த மற்றும் அதிக சொகுசு வசதியுடைய காராக மாறியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Hrithik Roshan’s Customized Mercedes V-Class. Read In Tamil.
Story first published: Thursday, April 2, 2020, 20:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X