Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீடியோவ பார்க்கும்போதே உதறுது... அந்த டிரைவர் எப்படிதான் பஸ்ஸ ஓட்டினாரோ! கண்டிப்பா பாராட்டியே ஆகணும்... வீடியோ
காரை திருப்பவே அச்சப்படக்கூடிய மிக மிக குறுகிய மலைப் பாதையில் பேருந்தை அதன் ஓட்டுநர் அசால்டாக திருப்பியிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை இப்பதிவில் காணலாம்.

ஆபத்தான மலை வழிப்பாதைகளுக்கு பெயர்போன நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாட்டில் மிகுந்த ஆபத்தான மற்றும் கரடு-முரடான மலைப் பாதையைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக ஹிமாச்சல பிரதேசம் இருக்கின்றது. இந்த மாநிலத்தின் மலைப் பாதை ஒன்றில் நிகழ்ந்த வியப்பை ஏற்படுத்தும் சம்பவம் பற்றிய வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

எச்ஆர்டிசி (Himachal Road Transport Corporation) போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த ஓட்டுனர் ஒருவர், காரை திருப்பவே தயக்கம் காட்டக்கூடிய மிகக் குறுகலான மலைப் பாதையில் பேருந்தை 'யு' டர்ன் செய்து பாராட்டிற்கு உரியவராக மாறியிருக்கின்றார்.

மிகவும் ஆபத்தான செயல் என்றாலும், ஓட்டுநரின் அசாத்திய பார்க்கையில் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தனது அசாத்திய திறனால் எந்தவொரு ஆபத்துமின்றி பேருந்தை ஒரு சில நிமிடங்களிலேயே மிக குறுகிய பாதையில் திருப்பியிருக்கின்றார்.

ஓட்டுநரின் இத்தகைய திறனைப் பாராட்டும் விதமாக நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்த வீடியோவையும் அவர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக நான்கு நிமிடங்கள் மற்றும் 24 விநாடிகளேக் கொண்ட அந்த வீடியோ, ஓட்டுநரின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

உள்ளூர் வாசி ஒருவரே இந்த சம்பவம் முழுவதையும் செல்போனில் படமாக்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்த வீடியோவே வாகனம் மற்றும் பயண ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த நபர், ஓட்டுநரின் திறமையை கிரிக்கெட் கமென்ட்ரியைப் போல் கூறுவதை நம்மால் கேட்க முடிகின்றது. இதன் மூலம் ஓட்டுநர் எத்தகைய சவால்களைக் கண்டார் என்பது தெரியவருகின்றது.

இதுபோன்ற மிக குறுகலான பாதையில் வாகனங்களை திருப்புவது மிகவும் ஆபத்தானது. பேருந்தை இயக்கியவர் கை தேர்ந்தவர் என்பதால், இந்த சூழலை சிரமங்களுடன் அசால்டாக சமாளித்திருக்கின்றார். ஆனால், இதனை அனைவராலும் செய்துவிட முடியும் என கூறிவிட முடியாது. மலைப்பாதைக்கு புதியவராகவோ, வாகனத்தை பற்றி முழுவதும் அறியாதவராகவோ இருந்தால் நிலைமை மிக மோசமானதாகிவிடும்.
எனவேதான, மிக சாதாரணமாக நேரங்களில்கூட வாகனத்தை ரிவர்ஸ் எடுக்கும்போது அதிக கவனம் தேவை என வாகன வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நம் நாட்டில் பலர் ரிவர்ஸ் எடுக்கும்போதே பெரும் விபத்தை ஏற்படுத்தியவர்கள். இத்தகையோர் மத்தியில் மிகவும் ஆபத்தான சுழலை அசால்டாக கடந்ததன் காரணத்தினாலயே இந்த ஓட்டுநரப் பலர் பாராட்டி வருகின்றனர்.