மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கிய கணவர்.. சிறப்பு தகவல்..!

மஹிந்திரா நிறுவனத்தின் கஸ்டமைசேஷன் பிரிவின் வாயிலாக தனித்துவமான கார் ஒன்றை மனைவிக்கு பரிசாக வழங்கி கணவர் அசத்தியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கி கணவர்.. சிறப்பு தகவல்..!

இந்தியாவின் புகழ்வாய்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, பல விதமான வாகனங்களை தயாரித்து விற்பனைச் செய்து வருகின்றது.

அது, கார் தயாரிப்பில் மட்டுமின்றி டூ வீலர், ஆட்டோ ரிக்ஷா, டிராக்டர் மற்றும் ஹெவி என அனைத்து விதமான வாகன தயாரிப்பிலும் கவனத்தைச் செலுத்தி வருகின்றது. மேலும், இந்த வாகனங்களை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதியும் செய்து வருகின்றது.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கி கணவர்.. சிறப்பு தகவல்..!

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இதானலயே இந்தியா மட்டும் உலக நாடுகள் சிலவற்றிலும் இந்நிருவனத்தின் தயாரிப்புகளுக்கு கணிசமான வரவேற்பு நிலவி வருகின்றது.

இதுமட்டுமின்றி, சந்தையில் தனக்கான இடத்தை எப்போதும் நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக தனித்துவமான செயல்பாடுகள் சிலவற்றையும் அது மேற்கொண்டு வருகின்றது.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கி கணவர்.. சிறப்பு தகவல்..!

இதனடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப அதன் தயாரிப்புகளை கஸ்டமைஸ் செய்து வழங்குவது போன்ற செயல்களை மஹிந்திரா செய்து வருகின்றது.

அந்தவகையில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கபில் சங்வி, அவரின் விருப்பத்திற்கேற்ப மஹிந்திராவின் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான டியுவி100 சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காரை அல்ட்ரா லக்சூரி கார்களுக்கு இணையாக கஸ்டமைஸ் செய்து பெற்றுள்ளார்.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கி கணவர்.. சிறப்பு தகவல்..!

இந்த காரை அவரது மனைவி மன்சி-க்கு பரிசாக வழங்குவதற்காகவே, பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்து பெற்றிருக்கின்றார். மஹிந்திரா நிறுவனம் இந்த சிறப்பு சேவையை ஆட்டோ மொபைல் பிரிவின் வாயிலாக செய்து வருகின்றது. இப்பிரிவு அதன் பிரபல தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மாற்றியமைப்பதுடன், அதனை வேற லெவல் தோற்றத்திற்கு அப்கிரேட் செய்து விடுகின்றது.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கி கணவர்.. சிறப்பு தகவல்..!

குறிப்பாக, கஸ்டமைஸ் வாயிலாக அதிக லக்சூரி வசதிக்கு கார்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இம்மாதிரியான மாடிஃபிகேஷன்கள்தான் தற்போது டியுவி300 காருக்கு வழங்கியிருக்கின்றது மஹிந்திரா.

அதுமட்டுமின்றி வெற லேவல் தோற்றத்திற்கு முழுமையாக சில கருவிகள் அகற்றப்பட்டு மாற்று அணிகலன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கி கணவர்.. சிறப்பு தகவல்..!

அந்தவகையில், முக்கிய மாற்றமாக இந்த காருக்கு ஆலிவ் கிரீன் நிறம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், காரின் முகப்பு க்ரில் நீக்கப்பட்டு 3மிமீ அளவுடைய அடர்ந்த ஸ்டீல் பிளேட் க்ரில் நிறுவப்பட்டிருக்கின்றது. இதேபோன்று, பழைய ஹெட்லைட்டுகள் அகற்றப்பட்டு புத்தம் புதிய வட்ட வடிவிலான முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கி கணவர்.. சிறப்பு தகவல்..!

இதைத்தொடர்ந்து பனி விளக்கு, பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகள் என அனைத்தும் ரீ டிசைன் செய்யப்பட்டு நிறுவப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமில்லாமல், காரின் வீல், பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பகுதி என அனைத்தும் வேறு டிசைனிங்கிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காரின் இன்டீரியரில் பார்த்தோமேயானால் இருக்கை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் சிலவற்றில் லேசான மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கி கணவர்.. சிறப்பு தகவல்..!

இதுதவிர, காருக்கு லேசான ஆஃப்ரோடர் லுக்கை வழங்கும் விதமாக முன்பக்க மேற்கூரையில் நான்கு எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இத்தகைய பல்வேறு கஸ்டமைசேஷன்களால் மஹிந்திரா டியுவி300 கார் தற்போது முரட்டுதனமாக லுக்கைப் பெற்றிருக்கின்றது.

மஹிந்திரா கஸ்டமைசேஷன் வாயிலாக தனித்துவமான காரை மனைவிக்கு பரிசு வழங்கி கணவர்.. சிறப்பு தகவல்..!

மேலும், இந்த பிரத்யேக காருக்கு டியுவி100 ஸ்டிங்கர் என்ற பெயரையும் அந்நிறுவனம் வைத்திருக்கின்றது. இந்த கஸ்டமைசேஷனில் எந்தவொரு சந்தைக்குப் பிறகான உதிரிபாகங்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆகையால், இதனை சாலையில் இயக்க உகந்த கார் என்று தகவல் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, மஹிந்திரா நிறுவனம் சாதாரண காரை வெற லெவல் லுக்கிற்கு மாற்றுவது முதல் முறையல்ல இதற்கு முன்னதாக அதன் ஹேட்ச்பேக் காரான கேயூவி100 காரை கூட மாடிஃபை செய்திருந்தது. குறிப்பிட்ட கஸ்டமைசேஷன்களால் அந்த கார் அல்ட்ரா லக்சூரி வசதிப் பெற்ற காராக மாறியது.

Image Courtesy: Mahindra

More from DriveSpark

Article Published On: Friday, March 13, 2020, 15:45 [IST]
English summary
Husband Gifted Custom Built Mahindra TUV300 To His Wife. Read In Tamil.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+