Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த வாகனங்களை எல்லாம் ஏலத்தில் விட போறாங்களாம்... காவல்துறை அதிரடி... எந்த நகரத்தில் தெரியுமா?
தங்களிடம் இருக்கும் வாகனங்களை ஏலத்தில் விட இருப்பதாக குறிப்பிட்ட நகர போலீஸார் அறிவித்திருக்கின்றனர். அது எந்த நகர போலீஸார் என்பதை இப்பதிவில் காணலாம்.

சட்ட ஒழுங்கு, முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு என பல்வேறு பொது சேவையில் ஈடுபட்டு வரும் காவல்துறை தற்போது வாகனங்களை ஏலத்திற்கு விடும் பணியிலும் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகர போலீஸாரே இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஹைதராபாத் நகரத்தில் இருக்கும் காவல்நிலையங்களில், கைவிடப்பட்ட மற்றும் உரிமையாளர்கள் என கூறிக்கொள்ள யாரும் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக 2,391 வாகனங்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. இவற்றில் சிலவற்றை ஏலத்தின் மூலமாக விற்பனைச் செய்ய ஹைதராபாத் காவல்துறை திட்டமிட்டிருக்கின்றது.

முதல்கட்டமாக 175 வாகனங்களை அவர்கள் ஏலத்தின் மூலம் வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏலத்தின் மூலம் விற்பனைச் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் காவல்துறை வெளியிட்டிருக்கின்றது.

2004 ஆர்/டபிள்யூ பிரிவு 40ன் படி நகரத்தில் உரிமை கோராமல், கைவிடப்பட்டிருக்கும் வாகனத்தை ஏலத்தில் விடலாம் என்ற விதி இருக்கின்றது. இதனைப் பயன்படுத்தியே ஹைதராபாத் நகர போலீஸார் தங்களிடம் கேட்பாரற்றுக் கிடக்கும் வாகனங்களை ஏலத்தில் விற்க முடிவு செய்திருக்கின்றனர்.

உரிமைக் கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களின் பட்டியல் www.hyderabadpolice.gov.in எனும் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன், நகரத்தின் போலீஸ் பயிற்சி மையத்திலும் வாகனங்கள்குறித்த தகவல் அட்டவணையாக ஒட்டப்பட்டுள்ளது.

அதில், ஏலம் விடப்பட இருக்கும் வாகனங்களின் பதிவெண், எந்த ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்டது மற்றும் சேஸிஸ் எண் என பல்வேறு தகவல்கள் அடங்கியிருக்கின்றன. பட்டியலில் பெரும்பாலும் ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ ஸ்பிளெண்டர், பேஷன் ப்ரோ, பஜாஜ் டிஸ்கவர், டிவிஎஸ் வீகோ, அப்பாச்சி மற்றும் ஹோண்டா யூனிகார்ன் ஆகிய இருசக்கர வாகனங்களே அதிகமாக இருக்கின்றன.

இத்துடன், சில ஆட்டோ ரிக்ஷாக்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் ஏதேனும் ஓர் வாகனத்தை அதன் உரிமையாளர் உரிமைகோர இருந்தால், அந்த வாகனம் தங்களுடையது என்பதற்கான சான்று மற்றும் சில வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதன் பின்னரே வாகனத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஹைதராபத் காவல்துறை தெரிவித்திருக்கின்றது. மேலும், இதற்கு 6 மாதங்கள் கால அவகாசத்தை வெளியிட்டிருக்கின்றது. பல்வேறு வாகனங்கள் துருவிற்கும், தூசிக்கும் இரையாகும் நிலையில் இருக்கின்றன.

இவை இடத்தையும் ஆக்கிரமப்பைச் செய்வதோடு பல்வேறு இடையூறுகளையும் வழங்கும் வகையில் இருக்கின்றன. எனவேதான் இவற்றை அகற்றும் முயற்சியில் ஹைதராபாத் போலீஸார் களமிறங்கியிருக்கின்றனர். இதன் தொடக்கமாகவே முதல் கட்டமாக 175 வாகனங்களின் பட்டியல் வெளியடப்பட்டுள்ளது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.