செலவே இல்லாமல் ரூ.5கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்! இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்டே

ரூ. 5 கோடி மதிப்புள்ள ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டமிட்ட கொள்ளையர்கள் போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

பணக்காரராக வேண்டும் என்பது பலரின் வாழ்நாள் கனவாக இருக்கின்றது. இந்த நிலையை உழைத்து அடைய நினைப்பவர்களைக் காட்டிலும் குறுக்கு வழியில் அடைய யோசிப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகின்றது. இதனை உறுதிச் செய்கின்ற வகையில் நாள்தோறும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

அம்மாதிரியான ஓர் சம்பவத்தைத்தான் தற்போது நாம் பார்க்கவிருக்கின்றோம். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் திவேஷ் காந்தி. தொழிலதிபரான இவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் ஃபெர்ராரி 458 காரை செகண்ட் ஹேண்டில் வாங்கினார். கேரள மாநிலம் கோழிகோடு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்ஸிக் எனும் நண்பரிடத்தில் இக்காரை அவர் வாங்கியிருந்தார்.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

அக்கார் ஜெஸ்ஸிக் எனும் பெயரிலேயே இருந்துள்ளது. இதனை தனது பெயரில் மாற்ற நினைத்த காந்தி, பெங்களூருவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வரும் நீரஜ் ஷர்மா மற்றும் அவரது நண்பர் கணேஷ் ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். மேலும், கார் தனது பெயரில் மாற்றப்படும் வரை காரை பாதுகாப்பாக நிறுத்த எண்ணிய காந்தி, மஹேந்திரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டை தேர்வு செய்தார்.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

அங்கு மிக பத்திரமாக காரை நிறுத்தியும் வைத்தார். இதைத்தொடர்ந்து, பெயர் மாற்றத்திற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்து கார் விற்பனை நிறுவன டீலரான பிரின்ஸ் பதக் என்பவருக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில், பிரின்ஸ் பதக்குடன் இணைந்து தானும் உதவுவதாக காந்திக்கு நீரஜ் வாக்குறுதி அளித்துள்ளார்.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

இம்மாதிரியான சூழ்நிலையில், நீரஜ் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிற்கு புறப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவரால் மீண்டும் இந்தியா திரும்ப முடியவில்லை எனவும் தெரிகின்றது.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

இந்நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி அன்று மஹேந்திரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மூவர், தங்களை காந்தியின் நண்பர்கள் என அறிமுகம் செய்து கொண்டனர்.

மேலும், காரை சர்வீஸ் செய்ய தங்களை காந்தி அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர்களிடத்தில் தெரிவித்தனர்.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

இதையடுத்து, எந்த வித தயக்குமின்றி அவர்களும் காரின் சாவியை முகம் தெரியாத அந்த மூவரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, காந்திக்கு அழைப்புவிடுத்த உறவினர்கள், "உன் நண்பர்கள் வந்து காரை எடுத்துக் கொண்டுச் சென்று விட்டனர்" என கூறினர்.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

இதைக் கேட்டதும் அதிர்ந்துபோன காந்தி, தான் அவ்வாறு எந்தவொரு நபரையும் அங்கு அனுப்பி வைக்கவில்லை. வந்தவர்கள் யாரோ என கூறியுள்ளார். அப்போதுதான் வந்தவர்கள் கார் திருடர்கள் என்பதையே அவர்கள் உணர்ந்தனர். உடனடியாக செயல்பட்ட காந்தி, கர்கானா காவல்நிலையத்தில் கார் திருட்டு சம்பவம்குறித்து புகார் அளித்தார்.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீஸார் சிசிடிவி கேமிராக்களில் இருந்து காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர். இதில், கார் திருட்டில் ஈடுபட்ட மூவர் கண்டறியப்பட்டனர். அதில், மிக முக்கயமான குற்றவாளியே காந்தி உதவிக்கு நாடிய நீரஜ் ஷர்மா என்பவர் தெரியவந்தது.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

இதைக் கேட்டு உறைந்துபோன காந்திக்கு மற்றுமொரு ஷாக்களிக்கும் விஷயமாக, அவரின் கார் ஏற்கனவே பிரின்ஸ் பதக் (டெல்லி டீலர்) என்பவரின் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் இணைந்தே இக்காரை திருடி அதிக லாபத்திற்கு விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

இதற்காக போலி ஆவணங்களைத் தயார் செய்த இக்கும்பல், பிரின்ஸ் பதக் என்ற பெயரில் ஃபெர்ராரி 458 காரை மாற்றினர். மேலும், இந்த விவகாரத்தில் மூவருக்கும் அதிகமானோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், முக்கிய குற்றவாளிகளான பதன் மற்றும் பிலால் ஆகியோர் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

செலவே இல்லாமல் ரூ. 5 கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம்... இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்...

TOI வெளியிட்ட களவு செய்யப்பட்ட காரின் புகைப்படம்.

ஃபெர்ராரி நிறுவனத்தின் இக்கார் இந்திய மதிப்பில் ரூ. 5 கோடிக்கும் விற்கப்பட்டு வருகின்றது. இதைதான் திவேஷ் காந்தி இரண்டு கோடி ரூபாய்களுக்கு செகண்ட் ஹேண்டில் வாங்கியிருந்தார். ஆனால், செலவே இல்லாமல் சுருட்டிக் கொள்ள திட்டமிட்ட திருடர்கள் தற்போது போலீசின் வசம் சிக்கியிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hydrabad Police Arrested 3 Thieves Who Stole Ferrari. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X