ஹூண்டாய் கார்கள் மீது ரூ.1 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு... முழு விபரம்!
ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கொரோனாவால் கடந்த இரண்டு மாதங்களாக கார் விற்பனையில் பெரும் அடி விழுந்துள்ளது. கார் விற்பனையை தூக்கி நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ, க்ராண்ட் ஐ10, க்ராண்ட் ஐ10 நியோஸ், எலைட் ஐ20 மற்றும் எலான்ட்ரா கார்களுக்கு ஜூன் மாத டிஸ்கவுண்ட் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ரூ.30,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு உள்ளது. ஹூண்டாய் ஐ10 நியோஸ் காருக்கு ரூ.25,000 வரை டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்புள்ளது. எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனஸாக இந்த ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு ரூ.60,000 வரையிலும், எலைட் ஐ20 காருக்கு ரூ.35,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் எலான்ட்ரா செடான் காருக்கு ரூ.1 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கார்ப்பரேட் டிஸ்கவுண்ட், பழைய கார்களை மாற்றி புதிய ஹூண்டாய் கார்கள் வாங்குவோருக்கு கூடுதல் மதிப்பாக வழங்கப்படும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை இந்த டிஸ்கவுண்ட் ஆஃபரில் அடங்கும்.

மேலும், டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளர்கள், கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கும் சிறப்புச் சேமிப்புகளை வழங்குவதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும், க்ரெட்டா மற்றும் வெனியூ ஆகிய எஸ்யூவி வகை கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த இரண்டு கார்களுக்கும் அதிக புக்கிங் கிடைத்து வருவதால், இப்போது ஆஃபர் எதையும் ஹூண்டாய் அறிவிக்கவில்லை. குறைவான விற்பனையில் இருக்கும் கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

ஹூண்டாய் அறிவித்துள்ள ஜூன் டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் மாநிலத்திற்கு மாநிலமும், டீலருக்கு டீலரும் வேறுபடும். எனவே, அருகில் உள்ள ஹூண்டாய் டீலரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்கள் மற்றும் ஆஃபர்களை தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








