ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம் வெளியாகி இருக்கிறது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் அடிப்படையிலான செடான் கார் மாடலாக அவ்ரா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய காம்பேக்ிட் ரக செடான் கார் இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ளது.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

இதன் புதுமையான டிசைன் அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள் நிச்சயம் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹூண்டாய் அவ்ரா கார் வரும் 21ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

இந்த காருக்கான முன்பதிவும் அண்மையில் துவங்கப்பட்டது. இந்த நிலையில், ஹூண்டாய் அவ்ரா காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம் வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் E, S, S CNG, SX மற்றும் SX(O) ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஏஎம்டி மாடலானது S மற்றும் SX ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் மட்டும் கிடைக்கும்.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

டீசல் மாடலானது S மற்றும் SX(O) வேரியண்ட்டுகளிலும், டீசல் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டானது S மற்றும் SX+ ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் SX+ வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

புதிய ஹூண்டாய் அவ்ரா கார் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் வர இருக்கிறது. இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வர இருக்கிறது.

MOST READ: பைக் வேண்டாம் என நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய இளைஞர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க...

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் மேனுவல் கியர்பாக்ஸ் அளிக்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். இது டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

MOST READ: கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் கார் போலார் ஒயிட், டைட்டான் க்ரே, தைபூன் சில்வர், விண்டேஜ் பிரவுன், ஃபியரி ரெட் மற்றும் அல்ஃபா புளூ ஆகிய 6 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

MOST READ: சூப்பர் ரூல்... நீங்கள் கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை இலவசமாகவே கடக்கலாம்... எப்படினு தெரியுமா?

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

புதிய ஹூண்டாய் அவ்ரா காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் விபரம்

ஹூண்டாய் அவ்ரா காருக்கு ரூ.6 லட்சம் ஆரம்ப விிலையாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. டாப் வேரியண்ட் ரூ.9 லட்சத்தில் கிடைக்கும். நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட காம்பேக்ட் செடான் கார்களுடன் போட்டி போடும்.

Source: ACI

Most Read Articles

English summary
Hyundai has revealed the variant details of the car along with the colour options.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X