சேமிப்புச் சலுகைகளுடன் ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிப்பு

ஹூண்டாய் கார்களுக்கான சிறப்பு சர்வீஸ் முகாம் நாடுமுழுவதும் நடத்தப்பட உள்ளது. இந்த சர்வீஸ் முகாம்களில் தங்களது ஹூண்டாய் கார்களை சர்வீஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களை பெறும் வாய்ப்பும் உள்ளது.

சேமிப்புச் சலுகைகளுடன் ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிப்பு

வரும் 14ந் தேதி முதல் 23ந் தேதி வரை ஹூண்டாய் கார்களுக்கான இந்த சர்வீஸ் முகாம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள 1,288 ஹூண்டாய் சர்வீஸ் மையங்களில் இந்த முகாம் 10 நாட்கள் நடக்க உள்ளது. ஹூண்டாய் ஸ்மார்ட் கேர் க்ளினிக் என்ற பெயரில் இந்த சர்வீஸ் முகாம் நடைபெற உள்ளது.

சேமிப்புச் சலுகைகளுடன் ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிப்பு

இந்த சர்வீஸ் முகாமில் பங்கேற்கும் வாடிக்கையாளர்கள் உதிரிபாகங்கள் மீது 10 சதவீத தள்ளுபடியும், லேபர் கட்டணம்மீது 20 சதவீத தள்ளுபடியும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

சேமிப்புச் சலுகைகளுடன் ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிப்பு

மேலும், இந்த சர்வீஸ் முகாமில் கட்டணமில்லாமல் காருக்கு பாடி வாஷ் மற்றும் 50 விதமான பரிசோதனைகளை கட்டணமில்லாமல் செய்து தரப்படும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

சேமிப்புச் சலுகைகளுடன் ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிப்பு

இந்த சர்வீஸ் முகாமில் பங்கு கொள்ளும் 200 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு ஓர் ஆண்டுக்கான கூடுதல் வாரண்டியும், 1,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 மதிப்புடைய அமேஸான் பரிசு கூப்பன் அல்லது எரிபொருளுக்கான கூப்பன் வழங்கப்படும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

சேமிப்புச் சலுகைகளுடன் ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிப்பு

இதுதவிர்த்து, புதிய ஹூண்டாய் கார் வாங்குவோருக்கு மாடல் தேர்வை பொறுத்து அதிகபட்சமாக ரூ.70,000 மதிப்புடைய தள்ளுபடி சலுகைகளையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்புச் சலுகைகளுடன் ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிப்பு

இதுகுறித்து ஹூண்டாய் விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் தருண் கர்க் கூறுகையில்,"வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவைகளை வழங்குவதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அந்த வகையில், இந்த சர்வீஸ் முகாம் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் வகையில் அமையும்," என்று தெரிவித்துள்ளார்.

சேமிப்புச் சலுகைகளுடன் ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிப்பு

ஹூண்டாய் ஸ்மார்ட் கார் கேர் க்ளினிக் முகாம் குறித்த விபரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். சிறப்பு தள்ளுபடிகளுடன் கூடிய இந்த கார் பரிசோதனை முகாம் ஹூண்டாய் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles

English summary
Hyundai India has announced a 10-day service camp, called 'Smart Care Clinic', held across the country. The nationwide service camp will be held between the 14th to 23rd of December 2020 and will offer customers comprehensive vehicle service and checkup options and other complimentary offers as well.
Story first published: Saturday, December 12, 2020, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X