ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

புத்தாண்டு முதல் ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட உள்ளது. மாடல் வாரியாக விலை உயர்வு விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

கொரோனாவால் வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல் துறை மெல்ல வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருகிறது. மேலும், நடப்பு ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் விலை உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாத நிலைக்கு வாகன நிறுவனங்கள் தள்ளப்பட்டன.

ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

இந்த நிலையில், கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு, பண பரிமாற்று விகிதத்தில் உள்ள நடைமுறை இழப்புகளை தவிர்க்கும் விதத்தில், விலை உயர்வு அஸ்திரத்தை கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. அதன்படி, ஹூண்டாய் கார்களின் விலை நாளை முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

ஹூண்டாய் கார்களின் விலை மாடல், வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு ரூ.7,500 முதல் ரூ.33,000 வரை அதிகரிக்கப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் கொடுத்த தகவல் மூலமாக தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

இதன்படி, ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விலை அதிகபட்சமாக ரூ.27,335 வரை அதிகரிக்கப்பட உள்ளது. வெனியூ எஸ்யூவி விலை ரூ.25,672 வரை அதிகரிக்கப்பட உள்ளது.

ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

பட்ஜெட் கார் மாடலான சான்ட்ரோ கார் விலை ரூ.9,112 வரையிலும், க்ராண்ட் ஐ10 நியோஸ் விலை ரூ.8,652 முதல் ரூ.14,556 வரை அதிகரிக்கப்பட உள்ளது.

ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

ஹூண்டாய் ஆரா செடான் கார் விலை ரூ.11,745 முதல் ரூ.17,988 வரையிலும், ஐ20 கார் விலை ரூ.7,521 வரையிலும் அதிகரிக்கப்பட உள்ளது. ஹூண்டாய் வெர்னா காரின் விலை அதிகபட்சமாக ரூ.32,880 வரை அதிகரிக்கப்பட உள்ளது.

ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்கிறது... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

இந்த விலை உயர்வு நாளை முதல் இன்வாய்ஸ் போடப்படும் 2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கும் பொருந்தும். எனவே, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தாலும், இன்று இன்வாய்ஸ் போடப்பட்டால் மட்டுமே விலை உயர்விலிருந்து தப்புவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

Most Read Articles

English summary
Hyundai Cars Model Wise Price Hike Details. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X