நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகளை ஹூண்டாய் மோட்டார் அறிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சேமிப்பை பெற முடியும் என்பது குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

வழக்கமாக நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளின்போது புதிய கார் வாங்குவதற்கு இந்தியர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கிறது. அத்துடன், கொரோனாவால் கடந்த சில மாதங்களாக கார் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போட்டவர்களும் இப்போது கார் வாங்கும் திட்டத்தில் இறங்கி இருக்கின்றனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்காக வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அனைத்து கார் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

அந்த வகையில், புதிய கார் வாங்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை வழங்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம். மாடல், வேரியண்ட்டிற்கு தக்கவாறு இந்த சேமிப்பு வேறுபடுகிறது. நேரடி தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகளாக இவற்றை பெற முடியும்.

நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ரூ.45,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. நேரடி தள்ளுபடியாக ரூ.25,000 வரையிலும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆஃபராகவும் வழங்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி எரிபொருள் தேர்வுகளில் கிடைக்கிறது. ரூ.4.63 லட்சம் முதல் ரூ.6.31 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு அதிகபட்சமாக ரூ.60,000 சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். நேரடி தள்ளுபடியாக ரூ.40,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாக ரூ.15,000 வரையிலும் பெற முடியும். அரசு ஊழியர்கள் ரூ.5,000 தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது.

நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரை வாங்குவோர் அதிகபட்சமாக ரூ.25,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவம், ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சலுகையாகவும் பெறலாம். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

ஹூண்டாய் எலைட் ஐ20

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் வந்துவிட்ட நிலையில், சில டீலர்களில் இருப்பில் இருக்கும் பழைய ஐ20 காருக்கு ரூ.75,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. நேரடியாக ரூ.50,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாக ரூ.20,000 வரையிலும், அரசு ஊழியர்களுக்கு ரூ.5,000 வரையிலும் சேமிப்புச் சலுகைகள் பெற முடியும்.

நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா காருக்கு ரூ.30,000 சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

ஹூண்டாய் எலான்ட்ரா

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு ரூ.1 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், வேரியண்ட்டுகளை பொறுத்து ரூ.70,000 வரையில் நேரடி தள்ளுபடியும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஹூண்டாய் எலான்ட்ரா கார் ரூ.17.7 லட்சம் முதல் ரூ.20.65 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்

பண்டிகை காலத்தில் ஹூண்டாய் கார்களுக்கு வழங்கப்படும் இந்த சேமிப்புச் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும். கடந்த 1ந் தேதி முதல் வரும் 30ந் தேதி வரை மேற்கண்ட ஹூண்டாய் கார்களை முன்பதிவு செய்வோர் இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள டீலரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Hyundai India has announced attractive festival discounts and benefits for potential buyers in the country. These offers will make new car purchase more accessible to buyers during Diwali this year. The company is offering maximum benefits of up to Rs 1 lakh depending on model and variant.
Story first published: Friday, November 6, 2020, 12:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X