ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

ஆண்டு கடைசி நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு இறுதி தள்ளுபடி சலுகைகளை ஹூண்டாய் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு சேமிப்பை பெற முடியும் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை முழுமயைாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

ஆண்டு இறுதி நெருங்கும்போது அனைத்து நிறுவனங்களும் நடப்பு ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட கார்களை விற்று தீர்ப்பதற்காக சிறப்பு சேமிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் டிசம்பர் டிலைட் என்ற பெயரில் ஆண்டுதோறும் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்து வருகிறது.

 ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

அந்த வகையில், தற்போது டிசம்பர் டிலைட் சேமிப்புச் சலுகைகள் மூலமாக அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிப்புக்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.

 ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, க்ராண்ட் ஐ10 உள்ளிட்ட முன்னணி கார் மாடல்களுக்கு நேரடி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக இந்த சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது.

 ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ரூ.50,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. நேரடி தள்ளுபடியாக ரூ.30,000 வரையிலும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் பெற முடியும். புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.4.63 லட்சம் முதல் ரூ.6.31 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு அதிகபட்சமாக ரூ.60,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.40,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 வரை கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கார் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

 ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு ரூ.60,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.40,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் உள்ளது.

 ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா காருக்கு ரூ.70,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், வேரியண்ட்டை பொறுத்து ரூ.50,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.5,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் பெற முடியும்.

 ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

ஹூண்டாய் எலான்ட்ரா

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு ரூ.1 லட்சம் வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.70,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் ரூ.17.60 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 ஹூண்டாய் வழங்கும் ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சேமிப்பு... விபரம்!

ஆஃபர் காலக்கெடு

ஹூண்டாய் டிசம்பர் டிலைட் சேமிப்புச் சலுகைகள் வரும் 31ந் தேதி வரை பெற முடியும். இந்த ஆண்டில் கடைசி கட்ட சேமிப்புச் சலுகைகள் என்பதால், இந்த ஆஃபர் விபரம் குறித்து அருகில் உள்ள ஹூண்டாய் டீலரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை தெரிந்து கொண்டு புக்கிங் செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 8, 2020, 12:53 [IST]
English summary
Hyundai has announced year-end offers and benefits on its select range of models for December 2020. The company is offering maximum benefits of up to Rs 1 lakh depending on model and variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+