கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு க்ரெட்டா எஸ்யூவி காரை விற்பனை செய்துள்ள ஹூண்டாய்...

புதிய தலைமுறை க்ரெட்டா எஸ்யூவி காரின் முன்பதிவில் 1.15 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு க்ரெட்டா எஸ்யூவி காரை விற்பனை செய்துள்ள ஹூண்டாய்...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாம் தலைமுறை க்ரெட்டா காரை கடந்த மார்ச் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அப்போதிலிருந்து லாக்டவுன் ஆன இந்த நேரத்திலும் கணிசமான விற்பனை எண்ணிக்கையை இந்த எஸ்யூவி கார் பெற்று வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு க்ரெட்டா எஸ்யூவி காரை விற்பனை செய்துள்ள ஹூண்டாய்...

குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 12,300 க்ரெட்டா கார்கள் விற்பனையாகியுள்ளன. க்ரெட்டா முதன்முதலாக கடந்த 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. க்ரெட்டா பெயர்பலகை உண்மையில் பெரிய அளவில் இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு க்ரெட்டா எஸ்யூவி காரை விற்பனை செய்துள்ள ஹூண்டாய்...

எந்த அளவிற்கு என்றால், இந்த ஐந்து வருடங்களில் மொத்தம் 5.2 லட்சம் க்ரெட்டா கார்கள் நம் நாட்டில் விற்பனையாகியுள்ளன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் இந்தியாவில் ஏதேனும் ஒரு மூலையில் ஒரு க்ரெட்டா கார் விற்பனையாகி இருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு க்ரெட்டா எஸ்யூவி காரை விற்பனை செய்துள்ள ஹூண்டாய்...

இந்த நிலையில்தான் விற்பனையில் மட்டுமில்லை முன்பதிவுகளும் இந்த காருக்கு அற்புதமாக கிடைத்துள்ளன என்பதை தெரியப்படுத்தும் விதமாக கடந்த ஆறு மாதங்களில் க்ரெட்டாவின் புதிய தலைமுறை காருக்கான 115,000 முன்பதிவுகள் ஏற்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு க்ரெட்டா எஸ்யூவி காரை விற்பனை செய்துள்ள ஹூண்டாய்...

க்ரெட்டாவிற்கு முதன்முறையாக அறிமுகமானதில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துகிறது. இருப்பினும் இதனை மேலும் அதிகரிக்கும் விதத்தில் புதிய அப்டேட்களுடன் இதன் இரண்டாம் தலைமுறையை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தி தற்போது விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு க்ரெட்டா எஸ்யூவி காரை விற்பனை செய்துள்ள ஹூண்டாய்...

2020 ஹூண்டாய் க்ரெட்டா இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) என்ற 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6-க்கு அப்கிரேட் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கும் புதிய க்ரெட்டாவின் நீளம் 4,300மிமீ, மேற்கூரை தண்டவாளங்களுடன் உயரம் 1,635மிமீ, அகலம் 1,790மிமீ ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு க்ரெட்டா எஸ்யூவி காரை விற்பனை செய்துள்ள ஹூண்டாய்...

2,610மிமீ நீள வீல்பேஸை கொண்டுள்ள இந்த எஸ்யூவி காரின் பின்பக்க சேமிப்பிடம் 433 லிட்டர்கள் கொள்ளவில் வழங்கப்படுகிறது. சமீபத்தில் க்ரெட்டாவின் எக்ஸ்ஷோரூம் விலைகளை ஹூண்டாய் நிறுவனம் அதிகரித்து இருந்தது. அதேநேரம் எண்ட்ரீ-லெவல் பெட்ரோல் ட்ரிம்-ஐயும் இந்த கார் புதியதாக பெற்றிருந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு க்ரெட்டா எஸ்யூவி காரை விற்பனை செய்துள்ள ஹூண்டாய்...

தற்சமயம் 2020 க்ரெட்டாவின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக உள்ளது. இந்த விலை முன்பு இருந்ததை காட்டிலும் ரூ.62,000 வரையில் அதிகமாகும். விற்பனையில் இதற்கு அடுத்த நிலையில் தற்போதைக்கு கியா மோட்டார்ஸின் செல்டோஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hyundai 2020 Creta receives over 115,000 bookings in 6 months of launch
Story first published: Friday, October 9, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X