எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள எலண்ட்ரா என்-லைன் மாடலின் சில டீசர் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

என் லைனில் வெளிவரும் இந்த மாடல் ஹூண்டாய் எலண்ட்ராவின் ஏழாம் தலைமுறை காராகும். இந்த புதிய வேரியண்ட்டிற்கு தயாரிப்பு நிறுவனம் ஸ்போர்ட்டியான தோற்றத்தையும், சிறப்பான செயல்திறனையும் வழங்கியுள்ளது.

எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

2021 ஹூண்டாய் எலண்ட்ரா என்-லைன் காரானது தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்களின் மூலம் பார்க்கும்போது என் லைன் முத்திரையுடன் பிரம்மாண்டமான தோற்றத்தில் கஸ்கட்டிங் க்ரில் அமைப்பை முன்புறத்தில் கொண்டுள்ளது. எல்இடி டிஆர்எல் விளக்குகளுடன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

இவற்றுடன் முன்புறத்தில் உள்ள பம்பர், அம்பு வடிவிலான டிசைன் பாகங்களுடன் சைடு ஏர் வெண்ட்ஸ் உடன் உள்ளது. பம்பருக்கு அடியில் சிறிய லிப் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியில் இந்த கார் 18 இன்ச்சில் ட்யூல்-டோனில் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது.

எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

பின்புறத்தில் பூட் லிட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லரை காண முடிகிறது. டெயில்லைட் ஒரே துண்டாக ஒரு முனையில் இருந்து மறு முனை வரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற பம்பர் ஃபாக்ஸ் டிஃப்யூஸரை ஏற்றுள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு ட்யூல் எக்ஸாஸ்ட் குழாய்யும் இந்த படத்தில் காட்சியளிக்கிறது.

எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

அதேபோல் தரமான ஹேண்ட்லிங்கிற்காக ஹூண்டாய் நிறுவனம் இந்த புதிய தலைமுறை எலண்ட்ரா மாடலை சற்று தாழ்வாக வடிவமைக்கும் என கூறப்படுகிறது. வெளிப்புறத்தை போல் உட்புற கேபினிலும் சில பகுதிகளில் சிவப்பு நிறத்தை கொண்டிருக்கும் என தெரிகிறது.

எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

ஹூண்டாய் அவெண்டே என்ற பெயரில் அறிமுகமாகவுள்ள எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் காருடன் ஒத்த உட்புற கேபினை டிசைனை பெறவுள்ள இந்த புதிய தலைமுறை காரில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் 10.25 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்படவுள்ளது.

எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

டேஸ்போர்ட்டில் கிடைமட்டமாக நேர்த்தியான வடிவில் ஏசி வெண்ட்ஸை எதிர்பார்க்கலாம். மற்றப்படி எலண்ட்ரா என்-லைன் காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இருப்பினும் இந்த காரில் 1.6 லிட்டர், இன்லைன்-4, டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

அதிகப்பட்சமாக 203 பிஎச்பி மற்றும் 265 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் தற்சமயம் ஆறாம் தலைமுறை எலண்ட்ரா மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்

இதன் இந்த ஏழாம் தலைமுறை காரின் அறிமுகம் 2021ஆம் வருடத்தின் இரண்டாம் பாதியில் இருக்கலாம். பொதுவாக இந்தியாவில் செயல்திறன்மிக்க ஹூண்டாயின் என் வரிசைகள் அவ்வளவு விற்பனையாகுவதில்லை. இதனால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கார்கள் நம் நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, July 9, 2020, 12:28 [IST]
English summary
2021 Hyundai Elantra N Line previewed in official renders
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+