கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே இதுவரை விற்பனையாகி வரும் எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புதிய டீசல் வேரியண்ட்டை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

ஹூண்டாய் நிறுவனம் எலண்ட்ரா மாடலின் ஃபேஸிஃப்ட் வெர்சனை கடந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. அப்போது பெட்ரோல் என்ஜினை மட்டும் பெற்றிருந்த எலண்ட்ரா மாடலின் இந்த புதிய டீசல் என்ஜினானது, கியா செல்டோஸ் மற்றும் புதிய க்ரெட்டா மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

இந்த ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் முன்னதாக 1.6 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றிருந்தது. ஆனால் தனது மொத்த தயாரிப்பு மாடல்களிலும் இருந்து இந்த டீசல் என்ஜின் தேர்வை நீக்கிய ஹூண்டாய் நிறுவனம் அதற்கு மாற்றாக தான் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டு வருகிறது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தற்சமயம் உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினானது, 152 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தி வருகிறது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

எலண்ட்ரா மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டை போன்று புதிய டீசல் வேரியண்ட்டும் S, SX மற்றும் SX(O) என்ற மூன்று ட்ரிம்களில் விற்பனை செய்யப்படவுள்ளன. இதில் ஆரம்ப நிலை S ட்ரிமிற்கு மேனுவல் கியர்பாக்ஸும், SX(O) ட்ரிமிற்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

மிட்-வேரியண்ட்டான SX ட்ரிமிற்கு மட்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் கொடுக்கப்படவுள்ளன. மற்றப்படி எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டில் வழங்கப்பட்டு வருகின்ற தொழிற்நுட்ப அம்சங்கள் இதன் புதிய டீசல் வேரியண்ட்டிலும் பொருத்தப்படவுள்ளன.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

ஹூண்டாய் நிறுவனம் எலண்ட்ரா மாடலில் 6 காற்றுப்பைகள், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோகிராம், ஹில் லான்ஞ் அசிஸ்ட், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், இரு நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ட்ரங்க் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைக்கக்கூடிய 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை வழங்கியுள்ளது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

இவற்றுடன் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் ப்ளூலிங்க் எனப்படும் ஹூண்டாய் நிறுவனத்தின் கனெக்டட் கார் தொழிற்நுட்பங்களும் பொருத்தப்பட்டுள்ளன. எலண்ட்ரா டீசல் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.21 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் 2020 ஹூண்டாய் எலண்ட்ரா... மார்க்கெட்டிற்கு எப்போது வரும்..?

ஹூண்டாய் எலண்ட்ராவின் பெட்ரோல் வேரியண்ட் கார் ரூ.15.89 - ரூ.20.39 லட்சங்களில் எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்திய சந்தைக்கு வரவுள்ள புதிய எலண்ட்ரா டீசல் காருக்கு போட்டியாக ஹோண்டா சிவிக் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா மாடல்கள் உள்ளன.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
Hyundai Elantra Diesel To Launch Soon. Will Share Engine With Creta 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X