'பவர்ஃபுல்' ஹூண்டாய் எலான்ட்ரா என் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எலான்ட்ரா காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனின் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த கார் குறித்த முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பவர்ஃபுல் ஹூண்டாய் எலான்ட்ரா என் மாடலின் படங்கள் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனம் 'N' என்ற குடும்ப வரிசையில் பெர்ஃபார்மென்ஸ் கார்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருகிறது. சாதாரண கார்களின் அடிப்படையில் அதிக சிறப்பம்சங்கள் செயல்திறன் கொண்டதாக இந்த ஹூண்டாய் என் வரிசை கார்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், என் பிராண்டில் பல புதிய மாடல்களை ஹூண்டாய் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில் புதிய தலைமுறை ஐ20 காரின் அடிப்படையிலான ஐ20 என் மாடலை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது எலான்ட்ரா காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனை வெளியிட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா என் கார் விலை உயர்ந்த வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும். இந்த காரில் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் தோற்றத்தில் மிரட்டலாக இருப்பதுடன், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா என் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 275 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படலாம். அத்துடன் ஆட்டோமேட்டிக் மாடலில் ரெவ் மேட்சிங் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்படும்.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் 0 - 100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

மேலும், லிமிடேட் ஸ்லிப் டிஃபரன்ஷியல் தொழில்நுட்பம், என் க்ரின் கன்ட்ரோல் என்ற டிரைவிங் மோடுகள் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த டிரைவிங் மோடுகளை மாற்றும்போது சஸ்பென்ஷன் மிக இறுக்கமாக மாறும் என்பதால், அதிவேகத்தில் சிறப்பான கையாளுமையை வழங்கும்.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா என் காரில் கூர்மையான தோற்றத்தை தரும் கூடுதல் ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்டு இருக்கும். அத்துடன், பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, கருப்பு வண்ண பினிஷிங் செய்யப்பட்ட விண்டோ லைன், பெரிய ஸ்பாய்லர், இரட்டை குழல் சைலென்சர், ரியர் டிஃபியூசர் ஆகியவற்றுடன் மிரட்டலான செடான் கார் மாடலாக இருக்கும். இந்த காரில் பைரெல்லி பிஸீரோ டயர்கள், 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதில், சிவப்பு வண்ண என் பிரேக் காலிபர்கள் கொண்ட டிஸ்க் பிரேக் சிஸ்டம் இடம்பெறுகிறது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா என் கார் மாடலானது உடனடியாக இந்தியாவில் வரும் வாய்ப்பு இல்லை. எனினும், வரும் ஆண்டுகளில் இந்த மாடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ஹூண்டாய் மோட்டார் நிச்சயம் இந்த காரை இந்தியாவிற்கு பரிசீலிக்கும் என நம்பலாம்.

Most Read Articles

English summary
Hyundai has revealed Elantra N model in official pictures ahead of global unveil.
Story first published: Tuesday, November 10, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X