ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் எந்தவொரு ஆர்பாட்டமும் இன்றி ஐ20 எலைட் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய பிஎஸ்6 காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

2020 ஹூண்டாய் ஐ20 எலைட் மாடல் மேக்னா+, ஸ்போர்ட்ஸ்+ மற்றும் ஆஸ்டா (ஒ) என்ற மூன்று புதிய வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் பிஎஸ்4 வெர்சனிற்கு வழங்கப்பட்டு வந்த ஆரம்ப நிலை வேரியண்ட்டான எரா உள்பட அனைத்து வேரியண்ட்டுகளும் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளன.

ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

இந்த புதிய பிஎஸ்6 காரின் டாப் வேரியண்ட்டான ஆஸ்டா (ஒ) ரூ.8.31 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையை பெற்றுள்ளது. மொத்த தோற்ற அடிப்படையில் பார்த்தால் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் கார், அதன் முந்தைய மாடலில் இருந்து எந்த டிசைன் அப்டேட்டையும் பெறவில்லை. இதனால் வழக்கமான தொழிற்நுட்ப வசதிகளில் தான் இந்த பிஎஸ்6 காரும் இயங்கவுள்ளது.

ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

2020 ஐ20 எலைட் மாடலின் வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மிக பெரிய மாற்றங்களாக ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கார்னரிங் விளக்குகள் மற்றும் 16 இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை உள்ளன. உட்புறத்தில் பெரும்பான்மையான தொழிற்நுட்பங்கள் இதன் முந்தைய தலைமுறை காரில் இருந்து அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

இந்த வகையில் இந்த பிஎஸ்6 காரின் உட்புற கேபினில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பல கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏசி வெண்ட்ஸ் உள்ளிட்ட வசதிகளை எதிர்பார்க்கலாம்.

ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

இயக்க ஆற்றலுக்கு 2020 ஐ20 எலைட் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வை மட்டும் தான் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் டீசல் வேரியண்ட் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட்டை பெறவில்லை.

ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

இந்த பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 82 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்-ல் 114 என்எம் டார்க் திறனையும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக காருக்கு வழங்கவல்லது. டீசல் என்ஜின் தேர்வு நிறுத்தப்பட்டதுபோல், ட்ரான்ஸ்மிஷன் தேர்வில் இருந்தும் சிவிடி கியர்பாக்ஸ் நீக்கப்பட்டுள்ளது.

ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

புதிய ஐ20 எலைட் பிஎஸ்6 மாடலுக்கு நான்கு சிங்கிள்-டோன் மற்றும் ஒரு ட்யூல்-டோன் என மொத்தம் 5 நிறத்தேர்வுகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஐந்து நிறத்தேர்வுகளாக போலார் வெள்ளை, டைப்பூன் சில்வர், ஸ்டார்டஸ்ட் க்ரே, நெருப்பின் சிவப்பு மற்றும் ட்யூல்-டோன் போலார் வெள்ளை/கருப்பு உள்ளிட்டவை உள்ளன.

ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

மேற்கூறப்பட்டுள்ள மாற்றங்களை தவிர்த்து புதிய ஐ20 எலைட் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் வேறெந்த அப்டேட்டையும் எதிர்பார்க்க முடியாது. இந்த பிஎஸ்6 மாடலை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் ஐ20 மாடலின் புதிய தலைமுறை காரையும் சந்தைக்கு கொண்டுவரவுள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறுப்பட்ட சாலைகளில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ள புதிய ஐ20 காரின் இந்திய அறிமுகம் மிக விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்திய சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்யும் ஹேட்ச்பேக் மாடல்களுள் ஐ20 எலைட் கார் முதன்மையானதாக உள்ளது. இதன் புதிய பிஎஸ்6 வெர்சனுக்கும் மாருதி சுசுகி பலேனோ மற்றும் டாடா அல்ட்ராஸ் உள்பட வழக்கமான ஹேட்ச்பேக் கார்கள் அனைத்தும் போட்டியினை தொடர்ந்து அளிக்கவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, March 27, 2020, 16:32 [IST]
English summary
Hyundai i20 Elite BS6 Launched In India: Prices Start At Rs 6.50 Lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+