பிஎஸ்6 எஃபெக்ட்.... ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் டீசல் மாடல் நீக்கம்
ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டீசல் மாடல் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான மாடலாக ஹூண்டாய் எலைட் ஐ20 இருந்து வருகிறது. அசத்தும் ஸ்டைல், பிரிமீயம் வசதிகளுடன் வசீகரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. இதனையடுத்து, ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பிஎஸ்6 மாடல் விரைவில் வர இருக்கிறது.

இதுவரை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, எலைட் ஐ20 காரின் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

இந்த டீசல் எஞ்சின் வாடிக்கையாளர்களின் தேர்வில் மிகச் சிறப்பானதாக இருந்து வந்தது. இந்த டீசல் எஞ்சின் 90 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறனை பெற்றிருந்தது. இந்த மாடல் விலக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த நிலையில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பிஎஸ்6 மாடலானது பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இந்த காரில் வழங்கப்பட்டும் வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிபபடுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

எனினும், புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய தலைமுறை மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தற்போதைய மாடலில் வழங்கப்பட இருக்கும் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் தேர்வானது மேக்னா ப்ளஸ், ஸ்போர்ட்ஸ் ப்ளஸ், அஸ்ட்டா ஆப்ஷனல் என மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கார்னரிங் விளக்குகள் வசதி, 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், புளூடூத் வசதி, வாய்ஸ் ரெகனிஷன் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவையமும் முக்கிய அம்சங்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications








