க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு சந்தைக்கு வந்த அப்டேட் செய்யப்பட்ட க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் டாப் வேரியண்ட்டான ஆஸ்டா ட்ரிமிற்கு AMT (ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்) தேர்வு புதியதாக வழங்கப்பட்டுள்ளது.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டும் சமீபத்தில் அறிமுகமான 2020 க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடல் காரின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ரூ.7.68 லட்சத்தையும், ஸ்போர்ட்ஸ் ட்யூல்-டோன் வேரியண்ட் ரூ.7.73 லட்சத்தையும் எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுள்ளன. இந்த விலை இந்த காரின் முந்திய தலைமுறை காரின் விலையை விட சுமார் ரூ.1.20 லட்சம் அதிகமாகும்.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

ஆனால் இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பல அப்டேட்டான வசதிகளை இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதாவது காரின் உட்புற கேபின் முழுவதும் கருப்பு நிற பெயிண்ட் அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

அதேபோல் புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் உள்ள காரின் உட்புறத்தில், ஓட்டுனருக்கு பல தகவல்களை வழங்கக்கூடிய திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் மொபைல் சார்ஜர், பின் இருக்கை பயணிகளுக்கு தனியாக சார்ஜர் பாயிண்ட், காரின் பின்புறத்தை ஓட்டுனர் பார்ப்பதற்காக மானிட்டர் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

வெளிப்புறத்தில் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 15 இன்ச்சில் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் உடன் முந்தைய ஐ10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து வசதிகளும் இந்த 2020 மாடலிலும் தொடர்ந்துள்ளன.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

என்ஜின் தேர்வுகளை பொறுத்தவரை, சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் வழக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளுடனும் 2020 க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

இதில் புதிய 1.0 லி டர்போ பெட்ரோல் என்ஜின் முன்னதாக ஹூண்டாய் வென்யூ மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது. வென்யூ மாடலில் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி பவரை வழங்கி வந்த இந்த என்ஜின், 2020 ஐ10 நியோஸ் மாடலிற்காக 99 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

ஹூண்டாயின் இந்த 2020 மாடல் டர்போ பெட்ரோல் என்ஜினை புதியதாக பெற்றுள்ளது என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக டர்போ என்ற லோகோ காரின் முன்பக்க க்ரில்லும், பின்புற கதவிலும் பொருத்தப்பட்டுள்ளது.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

மற்ற இரு என்ஜின் தேர்வுகளான 1.2 லி பெட்ரோல், 82 பிஎச்பி பவர்/114 என்எம் டார்க் திறனையும், 1.2 லி டீசல், 74 பிஎச்பி/190 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கி வருகின்றன. இதில் அனைத்து என்ஜின் தேர்வுகளுடனும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்படுகிறது.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

1.2 கப்பா மேக்னா, 1.2 லிட்டர் ஸ்போர்ட்ஸ் மற்றும் 1.2 யூ2 சிஆர்டிஐ ஸ்போர்ட்ஸ் என்ற மூன்று ட்ரிம்களுக்கு மட்டும் கூடுதலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இனி இந்த ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு 1.2 யூ2 சிஆர்டிஐ ஆஸ்டா என்ற க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் டாப் வேரியண்ட்டிற்கும் கொடுக்கப்படவுள்ளது.

க்ராண்ட் ஐ10 நியோஸின் டாப் வேரியண்ட்டிலும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுவரும் ஹூண்டாய்...

க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் இந்த ஆஸ்டா டாப் வேரியண்ட் இந்திய சந்தையில் ரூ.9.20 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புதிய ட்ரான்ஸ்மிஷன் தேர்வால் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஆஸ்டா வேரியண்ட் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: TEAM-BHP

Article Published On: Saturday, February 29, 2020, 19:40 [IST]
English summary
Hyundai Grand i10 Nios Automatic introduced on top spec Asta variant details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+