ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் அறிமுகம்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் டியூவல் டோன் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.7.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், ஸ்போர்ட்ஸ் டியூவல் டோன் மாடலுக்கு ரூ.7.73 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் அறிமுகம்!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் இந்த மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், வெனியூ காரில் இந்த எஞ்சின் 118 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் நிலையில், இந்த காரில் 99 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் அறிமுகம்!

இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல்தான் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வாக இருக்கிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் அறிமுகம்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது அதிக செயல்திறன் மிக்கது என்பதை காட்டும் விதத்தில், சாதாரண மாடலிலிருந்து சில வேறுபடுத்தும் சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, க்ரில் அமைப்பிலும், பின்புற கதவிலும் டர்போ பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் அறிமுகம்!

கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு உள்ளது. விசேஷ வண்ணத்திலான உதிரிபாகங்களுடன் அலங்காரமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பின்புற பயணிகளுக்கு தனி சார்ஜர், வயர்லெஸ் போன் சார்ஜர், ரியர் வியூ மானிட்டர் உள்ளன.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் அறிமுகம்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புரொஜெக்டர் பனி விளக்குகள் 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், போன்றயைும் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன. சாதாரண மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் இருக்கும் இதர அனைத்து வசதிகளும் இந்த காரிலும் இடம்பெற்றுள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் அறிமுகம்!

இந்த கார் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணத் தேர்வுகளில் கருப்பு வண்ண கூரையுடன் கிடைக்கும். அக்வா டீல் மற்றும் போலார் ஒயிட் ஆகிய இரண்டு ஒற்றை வண்ணத் தேர்விலும் கிடைக்கும்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் அறிமுகம்!

இந்த புதிய மாடலில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா, ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடல் அறிமுகம்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. சாதாரண பெட்ரோல் மாடலைவிட இந்த புதிய மாடல் ரூ.1.20 லட்சம் கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்க விஷயமாக கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 26, 2020, 16:35 [IST]
English summary
South Korean carmaker, Hyundai has launched the 2020 Grand i10 Nios with a 1.0-liter Turbo GDi petrol engine in India prices starting at Rs.7.68 Lakh (Ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+