ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளிவந்தது..!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட க்ராண்ட் ஐ10 நியோஸ் டீசல் மாடலை மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த புதிய பிஎஸ்6 டீசல் மாடலின் மைலேஜ் விவரம் வெளிவந்துள்ளது. அதனை இந்த செய்தியில் காண்போம்.

hyundai-grand-i10-nios-bs6-diesel-fuel-economy-rating-out-details

ஹூண்டாய் நிறுவனம் இந்த ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-டீசல் என்ஜினை பொருத்தியுள்ளது. இதன் மைலேஜ் அளவு குறித்து வெளிவந்துள்ள தகவலில் இதன் என்ஜின் லிட்டருக்கு 25.1 km/l மைலேஜ்ஜை வழங்கவல்லதாக ஏஆர்ஏஐ சான்றிதழ் வழங்கியுள்ளது.

hyundai-grand-i10-nios-bs6-diesel-fuel-economy-rating-out-details

இந்த மைலேஜ் அளவு நியோஸ் மாடலின் பிஎஸ்4 வெர்சனை விட 1.1 km/l குறைவாகும். 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படும் இந்த 1.2 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 75 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

hyundai-grand-i10-nios-bs6-diesel-fuel-economy-rating-out-details

இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி கடந்த 1ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டதால் மாருதி உள்பட முன்னணி நிறுவனங்களும் டீசல் மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்ய யோசித்து வருகின்றனர். ஏனெனில் டீசல் என்ஜின்களை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்துவது செலவு மிகுந்த பணியாக உள்ளது.

hyundai-grand-i10-nios-bs6-diesel-fuel-economy-rating-out-details

இருப்பினும் ஹேட்ச்பேக் பிரிவில் பிஎஸ்6 டீசல் என்ஜின் உடன் ஃபோர்டு ஃபிகோ உள்பட சில கார்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. ஃபோர்டு ஃபிகோ மாடலில் பெரிய அளவிலான 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

hyundai-grand-i10-nios-bs6-diesel-fuel-economy-rating-out-details

5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இதன் டீசல் என்ஜின் 24.4 km/l மைலேஜ்ஜை வழங்கக்கூடியது. இது ஹூண்டாயின் க்ராண்ட் ஐ10 நியோஸை விட சற்று குறைவு தான் என்றாலும், ஃபிகோவில் பவர் மற்றும் டார்க் அளவுகள் சற்று சிறப்பாகவே கொடுக்கப்பட்டுள்ளது.

hyundai-grand-i10-nios-bs6-diesel-fuel-economy-rating-out-details

அதேநேரம் ஃபோர்டு ஃபிகோவின் எக்ஸ்ஷோரூம் விலை க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலை விட ரூ.11,000 அதிகமாக ரூ.6.86 லட்சமாக உள்ளது. இருப்பினும் இதன் டாப் ட்ரிம்-ன் விலை ரூ.7.85 லட்சம் தான். ஆனால் ஐ10 நியோஸ் மாடல் அதிகப்பட்சமாக ரூ.8.04 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

hyundai-grand-i10-nios-bs6-diesel-fuel-economy-rating-out-details

ஹூண்டாய், ஃபோர்டு நிறுவனங்கள் மட்டும் தான் இப்போதைக்கு டீசல் என்ஜினை பிஎஸ்6 தரத்தில் வழங்கி வருகின்றன. இந்தியாவின் நம்பர்-1 கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கூட அதன் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலின் டீசல் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்திவிட்டு தற்சமயம் பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டும் தான் வழங்கி வருகிறது.

Most Read Articles
English summary
Hyundai Grand i10 NIOS BS6 Diesel Mileage Revealed: Here’s How It Compares To Its Rivals
Story first published: Monday, April 27, 2020, 21:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X