ஹுண்டாய் ஐ10 நியோஸின் பிஎஸ்6 டீசல் மாடலின் முழு விபரம் வெளிவந்தது...!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை அப்டேட் செய்துள்ளது. இதில் விரைவில் அறிமுகமாகவுள்ள க்ராண்ட் ஐ10 நியோஸ் டீசல் பிஎஸ்6 மாடலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹுண்டாய் ஐ10 நியோஸின் பிஎஸ்6 டீசல் மாடலின் முழு விபரம் வெளிவந்தது...!

இந்நிறுவனத்தின் லைன்அப்-ல் கடைசியாக பிஎஸ்6 அப்டேட்டை பெற்ற மாடலாக புதிய க்ராண்ட் ஐ10 நியோஸ் டீசல் கார் விளங்குகிறது. இந்த புதிய டீசல் மாடலில் அப்டேட் செய்யப்பட்ட என்ஜினை தவிர்த்து வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

ஹுண்டாய் ஐ10 நியோஸின் பிஎஸ்6 டீசல் மாடலின் முழு விபரம் வெளிவந்தது...!

அதேபோல் வழக்கமான 1.2 லிட்டர் டீசல் என்ஜின் தான் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. என்ஜின் அமைப்பைபோல் இந்த பிஎஸ்6 காருக்கு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாகவும் அதே 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தான் வழங்கப்படவுள்ளன.

MOST READ: தடையை மீறி சுற்றித் திரியும் வாகனங்களுக்கு அடையாளம்... கிடுக்கிப்பிடி போட்ட சேலம் போலீசார்!

ஹுண்டாய் ஐ10 நியோஸின் பிஎஸ்6 டீசல் மாடலின் முழு விபரம் வெளிவந்தது...!

ஹூண்டாய் ஐ10 நியோஸ் மாடலின் மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என்ற மூன்று வேரியண்ட்களில் பிஎஸ்6-க்கு மேம்படுத்தப்பட்ட இந்த டீசல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இதில் மிட்-வேரியண்ட்டான ஸ்போர்ட்ஸ் மட்டும் தான் கூடுதல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக ஏஎம்டி கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

ஹுண்டாய் ஐ10 நியோஸின் பிஎஸ்6 டீசல் மாடலின் முழு விபரம் வெளிவந்தது...!

ஐ10 நியோஸ் மாடலின் இந்த பிஎஸ்6 டீசல் வேரியண்ட்களின் விலைகள் குறித்த எந்த தகவலும் இதுவரை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. தற்சமயம் உலகை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கி வரும் கொரோனாவின் தாக்கம் தணிந்தவுடன் இந்த டீசல் கார்களின் விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ & சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்...

ஹுண்டாய் ஐ10 நியோஸின் பிஎஸ்6 டீசல் மாடலின் முழு விபரம் வெளிவந்தது...!

இந்த பிஎஸ்6 டீசல் வேரியண்ட்களின் அறிமுகத்திற்கு முன்னதாக ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து ஐ10 நியோஸ் மாடலின் ஆற்றல்மிக்க 1.0 லிட்டர் பிஎஸ்6 டர்போ-பெட்ரோல் வேரியண்ட் ஏற்கனவே சந்தையில் அறிமுகமாகி இருந்தது. இந்நிறுவனத்தின் வென்யூ எஸ்யூவி காரில் வழங்கப்பட்டு வரும் என்ஜினின் டி-ட்யூன் வெர்சனாக இந்த என்ஜின் வடிவமைக்கப்பட்டது.

ஹுண்டாய் ஐ10 நியோஸின் பிஎஸ்6 டீசல் மாடலின் முழு விபரம் வெளிவந்தது...!

இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான அவ்ரா காம்பெக்ட்-செடான் காரிலும் வழங்கப்பட்டு இருந்தது. பாரத பிரதமரின் வேண்டுக்கோளிற்கு இணங்க தற்சமயம் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஹூண்டாய் நிறுவனம் தொழிற்சாலை உள்பட அனைத்து விற்பனை மற்றும் சேவை மையங்களையும் இந்தியாவில் மூடியுள்ளது.

MOST READ: ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

ஹுண்டாய் ஐ10 நியோஸின் பிஎஸ்6 டீசல் மாடலின் முழு விபரம் வெளிவந்தது...!

இந்த நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 மார்ச் மாதத்திற்கான விற்பனை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இதில் வென்யூ மற்றும் புதிய க்ரெட்டா என்ற இரு எஸ்யூவிகள் மூலமாக மட்டுமே இந்நிறுவனம் 12,000 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும் க்ரெட்டாவின் விற்பனை எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட குறைவு தான். இதுகுறித்த முழுமையான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

ஹுண்டாய் ஐ10 நியோஸின் பிஎஸ்6 டீசல் மாடலின் முழு விபரம் வெளிவந்தது...!

ஐ10 மாடலின் மூன்றாம் தலைமுறை காராக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்டைலிஷான டிசைன், ப்ரீமியம் கேபின் மற்றும் சக்தி வாய்ந்த செயல்திறனால் சந்தையில் பிரபலமான ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றாக உள்ள இந்த காருக்கு போட்டியாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட், டாடா டியாகோ மற்றும் ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட கார்கள் உள்ளன.

Most Read Articles

English summary
Hyundai Grand i10 NIOS Diesel BS6 Specs & Details Revealed: Prices To Be Announced Later
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X