இந்த காரை வச்சிருக்கீங்களா! அப்போ பாதுகாப்பை எதிர்பார்க்காதீங்க... வீடியோவ பாருங்க எல்லாம் புரியும்!

இந்தியாவின் பெஸ்ட் விற்பனையாகும் காரொன்று மோதல் பரிசோதனையில் மிகக் குறைந்த தர மதிப்பைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த காரை வச்சிருக்கீங்களா... அப்போ பாதுகாப்பை எதிர்பார்க்காதீங்க... வீடியோவ பாருங்க எல்லாம் புரியும்...

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் கிராண்ட் ஐ10 நியாஸ் காரும் ஒன்று. இக்காரின் பாதுகாப்பு திறன் பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது. அண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பு நிகழ்த்திய மோதல் பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த காரை வச்சிருக்கீங்களா... அப்போ பாதுகாப்பை எதிர்பார்க்காதீங்க... வீடியோவ பாருங்க எல்லாம் புரியும்...

முதலில் காரைப் பற்றிய சிறிய தகவலைப் பார்த்துவிடலாம். ஹூண்டாய் நிறுவனத்தின்கீழ் விற்பனையாகும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் கிராண்ட் ஐ10 நியாஸ் மாடலும் ஒன்று. இக்கார் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரும்கூட. இது ஓர் மூன்றாம் தலைமுறை மாடலாகும். கவர்ச்சியான தோற்றம், நகரத்தின் டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற உருவம் என பல்வேறு ஈர்க்கும் விஷயங்களை இக்கார் கொண்டிருப்பதால் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த காரை வச்சிருக்கீங்களா... அப்போ பாதுகாப்பை எதிர்பார்க்காதீங்க... வீடியோவ பாருங்க எல்லாம் புரியும்...

ஆனால், இந்த கார்தான் அதன் ரசிகர்களை அதிருப்தியாக்கும் வகையில் மோதல் பரிசோதனையில் செயல்பட்டிருக்கின்றது. அதாவது, இக்கார் பாதுகாப்பு தரத்தில் வெறும் இரண்டு நட்சத்திரங்களை மட்டுமே பெற்றிருக்கின்றது. இதனால், ஹூண்டாய் மற்றும் அக்காரின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

இந்த காரை வச்சிருக்கீங்களா... அப்போ பாதுகாப்பை எதிர்பார்க்காதீங்க... வீடியோவ பாருங்க எல்லாம் புரியும்...

மோதல் பரிசோதனையின் முடிவுகள்; ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் பெரியவர்களின் பாதுகாப்பில் 7.05 பாயிண்டுகளை மட்டுமே பெற்றிருக்கின்றது. மொத்த பாயிண்டுகள் 17 என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று, சிறுவர்களின் பாதுகாப்பு தரத்தில் 49க்கு வெறும் 15 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கின்றது.

இந்த காரை வச்சிருக்கீங்களா... அப்போ பாதுகாப்பை எதிர்பார்க்காதீங்க... வீடியோவ பாருங்க எல்லாம் புரியும்...

இதுபோன்று ஒட்டுமொத்த தர ஆய்விலும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் கார் மிகக் குறந்த புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கின்றது. அதிகபட்சமாக மணிக்கு 64கிமீ எனும் வேகத்தில் இயக்கி செய்யப்பட்ட பரிசோதனையிலேயே இந்த மதிப்பீடுகளை அது பெற்றிருக்கின்றது. கிராஷ் டெஸ்டின் வீடியோவைக் கீழே காணலாம்.

ஹூண்டாய் நிறுவனம் இக்காரில் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகின்றது. குறிப்பாக, காரின் முன் பகுதியில் இரு ஏர் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் உள்ளிட்ட இன்னும் சில அம்சங்களை அது வழங்குகின்றது. இருப்பினும், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் கார், விபத்து பரிசோதனையில் மிகவும் குறைவான புள்ளிகளையேப் பெற்றிருக்கின்றது.

இந்த காரை வச்சிருக்கீங்களா... அப்போ பாதுகாப்பை எதிர்பார்க்காதீங்க... வீடியோவ பாருங்க எல்லாம் புரியும்...

மனிதர்களுக்கு பதிலாக நிலை நிறுத்தப்பட்டிருந்த டம்மிகளின் மார்பக பகுதி மற்றும் தலைப் பகுதிகளுக்கான பாதுகாப்பு போதியளவில் இல்லாததன் காரணத்தினாலயே இந்த தர மதிப்பை கிராண்ட் ஐ10 நியாஸ் கார் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், காரின் உடற்பகுதியும் மிகக் கடுமையாக சேதமடைந்திருக்கின்றது. இதுபோன்ற சில தகவல்களின் அடிப்படையிலேயே குளோபல் என்சிஏபி இரு ஸ்டார் மதிப்பெண்களை கிராண்ட் ஐ10 நியாஸ் காருக்கு வழங்கியுள்ளது.

இந்த காரை வச்சிருக்கீங்களா... அப்போ பாதுகாப்பை எதிர்பார்க்காதீங்க... வீடியோவ பாருங்க எல்லாம் புரியும்...

தொடர்ந்து, சிறுவர்களின் பாதுகாப்பும் இக்காரில் கேள்விக்குறியாக இருப்பதாக என்சிஏபி வெளியிட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றது. குறிப்பாக, 3 வயதுடைய குழந்தைகளுக்கான பாதுகாப்பு துளியளவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மிகக் கடுமையான பாதிப்புகளை மூன்று வயது மதிப்புடைய டம்மிகள் சந்தித்திருக்கின்றன. அதேசமயம், 18 மாதம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சிறந்த முறையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த காரை வச்சிருக்கீங்களா... அப்போ பாதுகாப்பை எதிர்பார்க்காதீங்க... வீடியோவ பாருங்க எல்லாம் புரியும்...

மும்முனை பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் இருக்கை உள்ளிட்டவை குழந்தைக்கு நல்ல பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பெஸ்ட் விற்பனையாகும் கார்களில் ஒன்றான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் இத்தகைய தர மதிப்பீட்டைப் பெற்றிருப்பது அந்த நிறுவனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சந்தைக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 12, 2020, 10:29 [IST]
English summary
Hyundai Grand i10 NIOS Secures 2 Star Rating At Global NCAP Crash Tests: Video!.. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+