ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் ஸ்பெஷல் எடிசனை விரைவில் கொண்டுவரவுள்ளது. இந்த நிலையில் கார்பொரேட் எடிசன் என்ற பெயரில் வெளிவரவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனின் விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 மாடலின் புதிய தலைமுறை காராக கடந்த ஆண்டில் அறிமுகம் செய்தது. அதன்பின் சிறந்த விற்பனை கார்களுள் ஒன்றாக உருவெடுத்த இந்த மாடலின் ஸ்பெஷல் எடிசன் வருகிற தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் மேக்னா வேரியண்ட்டின் நீட்டிப்பாக கொண்டுவரப்படுகின்ற கார்பொரேட் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்பெஷல் எடிசன், மேக்னா ட்ரிம்மின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேக்னா ட்ரிம்மில் வழங்கப்படும் வசதிகளை காட்டிலும் கூடுதல் வசதிகளை இந்த ஸ்பெஷல் எடிசனில் எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

இந்த வகையில் புதிய கார்பொரேட் எடிசன் சில சிறிய காஸ்மெட்டிக் அப்கிரேட்களை கொண்டிருக்கும். அடிப்படை எரா ட்ரிம்மிற்கும் உயர் ஸ்போர்ட்ஸ் ட்ரிம்மிற்கும் இடையில் இந்த ஸ்பெஷல் எடிசன் நிலைநிறுத்தப்படவுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

இதற்கிடையில் தற்போது ரஷ்லேன் செய்திதளத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் மேக்னா வேரியண்ட்டில் இருந்து டிசைன் மாற்றமாக காரின் உடல் நிறத்தில் ஓஆர்விஎம்-கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்களை இந்த ஸ்பெஷல் எடிசன் பெற்றிருக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

அதேபோல் 14 இன்ச் இரும்பு ரிம்களுக்கு பதிலாக 15 இன்ச்சில் கன்மெட்டல் ஸ்டைலில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றுடன் கார்பொரேட் என்ற முத்திரை காரை சுற்றிலும் நிச்சயம் எதிர்பார்க்கலாம். இவை தவிர்த்து புதிய எடிசனின் வெளிப்புறம் மேக்னா வேரியண்ட்டிற்கு இணையானதாகவே இருக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

உட்புறத்தில் அடிப்படை 2 டின் ஸ்டேரியோ சிஸ்டத்திற்கு மாற்றாக ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, ஸ்மார்ட்போன் நாவிகேஷன் உள்ளிட்டவற்றை ஏற்கக்கூடிய 6.85 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அப்கிரேட்கள் கொண்டுவரப்படவுள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

அதேபோல் பிரிவில் முதலாவதாக பாக்டீரியா & பூஞ்சை எதிர்ப்பு இருக்கைகள் மற்றும் ஹெபா வடிக்கட்டி & சைகை கண்ட்ரோல் உடன் காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்டவற்றையும் இந்த ஸ்பெஷல் எடிசனில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கவுள்ளதாக இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

மேலும் மேக்னா ட்ரிம்மில் இருப்பதுபோல் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்வதுபோல் இல்லாமல் இந்த புதிய எடிசனில் பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகளை எலக்ட்ரிக் மூலமாக சரிசெய்து கொள்ள முடியும். ஆனால் காரின் என்ஜின் அமைப்பில் மாற்றம் இல்லை.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

இதனால் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின்கள் தான் தேர்வுகளாக இந்த ஸ்பெஷல் எடிசனுக்கும் வழங்கப்படவுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 82 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்-ல் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

அதுவே டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு நிலையாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகின்றன. அதேநேரம் பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதலாக 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்... இணையத்தில் முழுவிபரங்கள் கசிந்தன...

மற்றப்படி கிராண்ட் ஐ10 நியோஸின் இந்த ஸ்பெஷல் ட்ரிம்மிற்கு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்க வாய்ப்பில்லை. இந்த ஸ்பெஷல் எடிசனின் விலை குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. பிஎஸ்6 மேக்னா ட்ரிம்மின் பெட்ரோல் வேரியண்ட் ரூ.6.44 லட்சம் வரையிலான விலைகளிலும், டீசல் வேரியண்ட் ரூ.7 லட்சத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hyundai Grand i10 NIOS Corporate Edition Brochure Leaks – Launch Soon
Story first published: Friday, September 11, 2020, 13:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X