பவர்ஃபுல் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

பவர்ஃபுல் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 'டர்போ' எஞ்சின் மாடல் அறிமுகம்!

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் பிரிமீயம் அம்சங்களுடன் மிகச் சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் விளங்குகிறது. கடந்த ஆண்டு இந்த காரின் புதிய தலைமுறை மாடல் நியோஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது. வழக்கம்போல் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மை வகிக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 'டர்போ' எஞ்சின் மாடல் அறிமுகம்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் மதிப்பை உயர்த்தும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்திலும் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 'டர்போ' எஞ்சின் மாடல் அறிமுகம்!

இந்த புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் நியோஸ் காரிலும் வழங்கப்பட உள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 'டர்போ' எஞ்சின் மாடல் அறிமுகம்!

ஹூண்டாய் வெனியூ காரில் இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 எச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஆனால், அண்மையில் வந்த நியோஸ் காரின் செடான் மாடலாக இருக்கும் ஆராவில் 100 எச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 'டர்போ' எஞ்சின் மாடல் அறிமுகம்!

இதேபோன்று, நியோஸ் காரில் இருக்கும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100 எச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 'டர்போ' எஞ்சின் மாடல் அறிமுகம்!

சாதாரண நியோஸ் காரிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் இந்த மாடலின் க்ரில் அமைப்பிலும், பின்புற டெயில் கேட் எனப்படும் கதவிலும் டர்போ என்ற வாசகம் சிவப்பு எழுத்துக்களில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 'டர்போ' எஞ்சின் மாடல் அறிமுகம்!

உட்புறத்தில் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரீயர் தீம் பயன்படுத்தப்பட்டு இருப்பதுடன், சிவப்பு வண்ண தையல் அலங்காரமும் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 'டர்போ' எஞ்சின் மாடல் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது ஸ்போர்ட்ஸ் என்ற ஒரே வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் 'டர்போ' எஞ்சின் மாடல் அறிமுகம்!

சாதாரண 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடலைவிட, புதிய டர்போ நியோஸ் மாடலிின் விலை ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை கூடுதலாக நிர்ணயிக்கப்படும். மிக விரைவில் விலை அறிவிப்பு வெளியிடப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2020, 10:29 [IST]
English summary
Hyundai Motors has unveiled Grand i10 Nios Turbo Petrol model at auto expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+