ஹூண்டாய் ஐ10 எங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது? இந்தியாவிலா (அ) ஐரோப்பாவிலா? அதிர்ச்சிகர முடிவுகள்

ஐரோப்பிய சந்தைக்கான ஹூண்டாய் ஐ10 மாடல் ஐரோப்பிய என்சிஏபி மோதல் சோதனையில் 3 நட்சத்திர மதிப்பீடுகளை பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் ஐ10 எங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது? இந்தியாவிலா (அ) ஐரோப்பாவிலா? அதிர்ச்சிகர முடிவுகள்

சமீபத்தில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் மாடல், உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் வெறும் 2 நட்சத்திரங்களை பெற்றது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஹூண்டாய் ஐ10 எங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது? இந்தியாவிலா (அ) ஐரோப்பாவிலா? அதிர்ச்சிகர முடிவுகள்

ஆனால் இதன் ஐரோப்பிய வெர்சன் ஐரோப்பிய என்சிஏபி சோதனையில் மூன்று நட்சத்திரங்களை பெற்றுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், உலகளாவிய என்சிஏபி சோதனையை காட்டிலும் ஐரோப்பிய என்சிஏபி மோதல் சோதனையில் அதிக மதிப்பீடுகளை பெறுவது கடினமானதாகும்.

ஹூண்டாய் ஐ10 எங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது? இந்தியாவிலா (அ) ஐரோப்பாவிலா? அதிர்ச்சிகர முடிவுகள்

இருப்பினும் ஹூண்டாய் ஐ10 நியோஸின் ஐரோப்பிய மாடல் 3 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. தோற்றத்தில் இந்திய ஐ10 நியோஸுக்கும், ஐரோப்பிய ஐ10-க்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் ஐரோப்பிய பாதுகாப்பு நிலைப்பாட்டுகளுக்காக அங்கு ஐ10-ல் அதிகளவில் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் ஐ10 எங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது? இந்தியாவிலா (அ) ஐரோப்பாவிலா? அதிர்ச்சிகர முடிவுகள்

இதில் முன்பக்க மற்றும் திரை காற்றுப்பைகள், சீட் பெல்ட் அணியாததை நினைவூட்டும் வசதி, முன் & பின் இருக்கை வரிசையில் குறிப்பிட்ட எடையை மட்டுமே பராமரிக்க வேண்டும் என்ற வரம்புகள், தானியங்கி அவசரகால ப்ரேக்கிங், ஸ்பீடு அசிஸ்டன்ஸ் மற்றும் பாதை உதவி சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஹூண்டாய் ஐ10 எங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது? இந்தியாவிலா (அ) ஐரோப்பாவிலா? அதிர்ச்சிகர முடிவுகள்

இவை அனைத்தையும் கொண்ட ஐரோப்பிய-ஐ10 மாடல் தான் அங்கு மோதல் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. அதுவே இந்திய ஐ10 நியோஸில் முன்பக்கத்தில் இரு காற்றுப்பைகள், ஏபிஎஸ் மற்றும் முன் பயணிகள் சீட் பெல்ட் அணியாததை நினைவூட்டும் வசதிகள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் ஐ10 எங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது? இந்தியாவிலா (அ) ஐரோப்பாவிலா? அதிர்ச்சிகர முடிவுகள்

உலகளாவிய-என்சிஏபி செயலிழப்பு சோதனைகளில், இந்தியா-ஸ்பெக் நியோஸின் கட்டமைப்பு நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் அதே நேரம் யூரோ-என்சிஏபி சோதனைகளில் முன் மற்றும் பக்க மோதல் முடிவுகளின்படி ஐரோப்பிய-ஸ்பெக் மாடலின் கட்டமைப்பு நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ10 எங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது? இந்தியாவிலா (அ) ஐரோப்பாவிலா? அதிர்ச்சிகர முடிவுகள்

ஹூண்டாய் ஐ10 ஹேட்ச்பேக் கார், ஐரோப்பிய சோதனையில் முதிர் பயணிகளின் பாதுகாப்பில் 69%-ஐயும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 75%-ஐயும், பாதசாரிகள் சோதனையில் 52%-ஐயும், பாதுகாப்பு உதவி அமைப்புகளின் செயல்திறனில் 52%-ஐயும் மதிப்பெண்களாக பெற்றுள்ளது.

ஹூண்டாய் ஐ10 எங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது? இந்தியாவிலா (அ) ஐரோப்பாவிலா? அதிர்ச்சிகர முடிவுகள்

மேற்கூறிய பாதுகாப்பு தொழிற்நுட்பங்களுடன் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் ஐ10 காரில் இ-அழைப்பு வசதியையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது. இந்த வசதி கார் எதாவது ஒரு விபத்தில் சிக்கியிருந்தால் உடனடியாக அவசரகால சேவை மையங்களுக்கு தன்னிச்சையாக குறுஞ்செய்தியை அனுப்பிவிடும்.

இந்த வசதியை ஐரோப்பிய-என்சிஏபி மோதல் சோதனை குழுவினர் பாராட்டியுள்ளனர். இந்த சோதனைகளின் மூலமாக இந்தியாவில் விற்கப்படும் ஐ10 நியோஸை காட்டிலும் ஐரோப்பிய ஐ10 பாதுகாப்பில் பல படிக்கட்டுக்கள் மேலே உள்ளதை தெளிவாக அறிய முடிகிறது.

Most Read Articles

English summary
Hyundai i10 For Europe Scores 3 Star Safety Rating
Story first published: Thursday, December 10, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X